தேசிய தொழில்நுட்ப தினம்: ரூ.5,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று(மே 11) லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் கிராவிடேஷனல் வேவ் அப்சர்வேட்டரிக்கு(LIGO-India) அடிக்கல் நாட்டினார். மேலும், தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு ரூ.5800 கோடி மதிப்பிலான அறிவியல் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
"தேசிய தொழில்நுட்ப தினம் நம் நாட்டில் ஒரு முக்கியமான நாள். இந்தியாவின் அறிவியல் முன்னேற்றங்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து உழைத்த இந்த நாட்டின் விஞ்ஞானிகளுக்கு நன்றி... கடந்த ஒன்பது ஆண்டுகளில், இந்தியா முன்னேறவும், தொழில்நுட்ப துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடையவும் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளோம்." என்று பிரதமர் இன்று கூறினார்.
இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக உழைத்து பொக்ரான் சோதனைகளை வெற்றிகரமாக நடத்திய இந்திய விஞ்ஞானிகளை கௌரவிக்கும் வகையில் 1999 முதல் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
details
ஒவ்வொரு ஆண்டும் மே 11 அன்று தேசிய தொழில்நுட்ப தினம் அனுசரிக்கப்படுகிறது
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயினால் தேசிய தொழில்நுட்ப தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போதிருந்து, தேசிய தொழில்நுட்ப தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 11 அன்று அனுசரிக்கப்படுகிறது.
LIGO-இந்தியா, ஹிங்கோலி; ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ஜட்னி, ஒடிசா; மற்றும் டாடா மெமோரியல் மருத்துவமனையின் பிளாட்டினம் ஜூபிலி பிளாக், மும்பை; ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
விசாகப்பட்டினத்தில் உள்ள அரிய பூமி நிரந்தர ஆலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த வசதியின் மூலம் இந்தியா முதன்முதலாக அரிய பூமி நிரந்தர காந்தங்களை உருவாக்க இருகிறது.