Page Loader
இந்தியாவில் டெஸ்லா உற்பத்தியை தொடங்க திட்டமா? மோடியை பின் தொடர்ந்த எலான் மஸ்க்! 
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் பாலோ செய்த எலான் மஸ்க்

இந்தியாவில் டெஸ்லா உற்பத்தியை தொடங்க திட்டமா? மோடியை பின் தொடர்ந்த எலான் மஸ்க்! 

எழுதியவர் Siranjeevi
Apr 11, 2023
11:07 am

செய்தி முன்னோட்டம்

பிரபல தொழிலதிபரான டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார். இதனிடையே, எலான் மஸ்க் உலக அளவில் டிவிட்டரில் அதிக பாலோயர்ஸை பெற்றவர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதல் இடத்தையும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவும் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு மாற்றங்களை செய்து வந்த எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டரின் லோகோவான குருவியை எடுத்துவிட்டு நாயின் லோகோவை மாற்றியிருந்தார். இந்நிலையில், எலான் மஸ்க் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பின் தொடர்ந்துள்ளார். இதற்கு காரணம் என விவாதத்தில், இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தை தொடங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளாரா? என்றும் டிவிட்டர் பயனாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post