Page Loader
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம்
ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டாண்டு சிறை தண்டனை விதிப்பு

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம்

எழுதியவர் Nivetha P
Mar 23, 2023
12:05 pm

செய்தி முன்னோட்டம்

2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார். எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்னும் பெயரினை பொதுவாக வைத்துள்ளார்கள் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி அவமதிப்பு வழக்கினை பதிவு செய்திருந்தார். இதன் தீர்ப்பு தான் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 30 நாளுக்குள் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் என்றும் சூரத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டாண்டு சிறை தண்டனை விதிப்பு