Page Loader
ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு 
இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைகளுக்கு எதிராக ஆதரவைத் திரட்டி வருகின்றன.

ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு 

எழுதியவர் Sindhuja SM
May 11, 2023
12:17 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22 ஆம் தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு அரசு விருந்து அளிக்க உள்ளனர். "இந்தப் பயணம், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும். தொழில்நுட்பம், வர்த்தகம், உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகளில் வலுவான இருதரப்பு ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்ய தலைவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்." என்று மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.

details

அமெரிக்க-இந்தியா உறவு  இன்னும் வலுப்பெறுகிறது

சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதிக்கான கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளை மேம்படுத்துவதில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த விஷயத்தில் சீனாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி மேற்கொள்ள இருக்கும் இந்த அரசுமுறை பயணம், அமெரிக்க-இந்திய உறவு இன்னும் வலுப்பெறுகிறது என்பதற்கான அறிகுறியாகும். இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைகளுக்கு எதிராக ஆதரவைத் திரட்டி வருகின்றன. பிரதமர் மோடி 2021 ஆம் ஆண்டில் குவாட் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகைக்கு சென்று அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். ஆனால், அது முழு அரசுப் பயணம் அல்ல. இந்த சந்திப்பின் போது, இந்தோ-பசிபிக் பிரச்சனைகள் மற்றும் மூலோபாய தொழில்நுட்ப கூட்டாண்மை ஆகியவை விவாதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.