'பிரதமர் மோடி விஷப் பாம்பை போன்றவர்': மல்லிகார்ஜுன் கார்கே
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடியை விஷ பாம்புடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவின் கடக்கில் நடைபெற்ற பேரணியில் பேசிய கார்கே, பிரதமர் நாட்டை சீரழித்து விட்டார் என்று கூறியிருக்கிறார்.
"அவர்களது சித்தாந்தமும் சிந்தனையும் மோசமாக இருப்பதால், அது நாட்டை நாசமாக்கி இருக்கிறது. மக்கள் அவரை பற்றி தவறாக நினைக்கிறார்கள். மோடி விஷப் பாம்பை போன்றவர். ஆனால், அவருக்கு நீங்கள் ஒரு வாய்ப்பை அளித்துவிட்டீர்கள்." என்று கார்கே கூறியுள்ளார்.
மேலும், இது நடந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, கார்கே தனது கருத்தை வாபஸ் பெற்றார்.
"அது பிரதமர் மோடி பற்றிய கருத்து அல்ல. பாஜகவின் சித்தாந்தம் 'பாம்பு போன்றது' என்று நான் கூறினேன்" என்று அவர் அதற்கு பிறகு தெரிவித்துள்ளார்.
details
பாம்பை தொட முயன்றால் மரணம் நிச்சயம்: கார்கே
"அதை நான் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியை குறிப்பிட்டு ஒருபோதும் கூறவில்லை. அவர்களின் சித்தாந்தம் பாம்பு போன்றது, அதைத் தொட முயன்றால் மரணம் நிச்சயம்." என்று மேலும் அவர் கூறியுள்ளார்.
கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸும், பாஜகவும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
கர்நாடகாவின் பாஜக அரசு ஒப்பந்தத்தில் 40 சதவீத கமிஷன் வாங்கியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இதற்கிடையில், பா.ஜ.க.வுக்கு வலு சேர்க்கும் வகையில், மாநிலத்தில் தொடர் பேரணிகள் மற்றும் ரோட்ஷோக்களை பிரதமர் மோடி நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் ஏப்ரல் 28 முதல் மே 7 வரை பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்துவார் என்று கூறப்படுகிறது.