கேரளா வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி புகைப்படம் - கடும் கண்டனம்!
கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் சேவையான திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்கிறது. இந்நிலையில், வந்தே பாரத் ரயில் சேவை ஷோரனூர் ரெயில் நிலையம் வந்தபோது ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் முழுவதும் பாலக்காடு காங்கிரஸ் எம்.பி. ஸ்ரீகண்டன் புகைப்படத்தை அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ளனர். உடனே இது சம்மந்தமாக ரயில்வே பாதுகாப்புப் படையினர்கள் வந்து போஸ்டர்களை கிழித்து அகற்றினர். பின் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்மந்தமான வீடியோ காட்சியும் வைரலாக பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.