இந்தியாவின் முதல் நீர் வழி மெட்ரோ: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
நகரங்களில் வாழ்வதை எளிதாக்கும் வகையில், இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோவை பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஏப் 25) கேரளாவின் கொச்சியில் தொடங்கி வைக்கிறார்.
மலிவான விலை, விரைவான பயணம், பாதுகாப்பான சுற்றுலாவை உறுதி செய்யும், பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட வாட்டர் மெட்ரோ நாளை முதல் கொச்சியில் இயங்கும்.
கொச்சியை சுற்றியுள்ள 10 தீவுகளை இந்த வாட்டர் மெட்ரோ இணைக்கும். பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் விலை மலிவாக இருக்கும்.
ஒருமுறை பயணம் செய்வதற்கு ரூ.20 முதல் ரூ.40 வரை மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.
details
எட்டு மின்சார படகுகளுடன் செயல்படத் தொடங்க இருக்கும் வாட்டர் மெட்ரோ
வழக்கமான பயணிகள் பயண பாஸ்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பாஸ்கள் ஒரு வாரத்திற்கு-ரூ.180க்கும், மாதத்திற்கு ரூ.600க்கும், ஒரு காலாண்டுக்கு ரூ.1,500க்கும் வழங்கப்படும்.
டிக்கெட்டுகளை டெர்மினல்களில் அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் கௌண்டர்களில் அல்லது மொபைல் QR குறியீடு மூலம் பெற்று கொள்ளலாம்.
கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டம் ₹ 1,137 கோடி செலவில் ஜெர்மன் வங்கியான KFW நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மெட்ரோ திட்டத்தை கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் உற்பத்தி செய்துள்ளது. முதற்கட்டமாக, கொச்சி வாட்டர் மெட்ரோ எட்டு மின்சார படகுகளுடன் செயல்படத் தொடங்கும்.