Page Loader
நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல்
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகி கொண்டிருக்கிறார்கள்: கபில் சிபல்

நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல்

எழுதியவர் Sindhuja SM
Apr 07, 2023
04:11 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் சமூக நீதிக்கான பாஜகவின் அர்ப்பணிப்பு குறித்த கருத்தை சாடிய ராஜ்யசபா எம்.பி கபில் சிபல், பாஜக அரசாங்கத்தின் கீழ் "பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகி கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார். பாஜகவின் 44-வது நிறுவன தின விழாவில் நேற்று(ஏப் 6) பேசிய பிரதமர் மோடி, இலவச ரேஷன் திட்டம், மருத்துவக் காப்பீடு மற்றும் பிற நலத்திட்டங்களை மேற்கோள் காட்டி, சமூக நீதி என்பது பாஜகவின் கொள்கை என்று கூறி இருந்தார். இதை இன்று விமர்சித்த எம்.பி கபில் சிபல், பாஜக ஆட்சியில் ஏழைகள் இன்னும் ஏழைகளாகி கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இந்தியா

இது குறித்து ட்வீட் செய்த எம்.பி கபில் சிபல் கூறி இருப்பதாவது:

"பிரதமர்: 'பாஜக சமூக நீதிக்காக வாழ்கிறது, அதை எழுத்திலும் உணர்விலும் பின்பற்றுகிறது. நிதர்சனமான உண்மைகள்: (1) 2012-2021 ஆண்டுகள் வரை உருவாக்கப்பட்ட செல்வத்தில் 40 சதவீதம், மக்கள் தொகையில் 1 சதவீதத்தினருக்கு மட்டுமே சென்றுள்ளது. (2) 2022 இல் அதானியின் சொத்துக்கள் 46 சதவீதம் அதிகரித்துள்ளது. (3) GSTயின் 64 சதவீத வரிப்பணம் கீழ்நிலையில் உள்ள 50 சதவீத மக்களிடம் இருந்து வந்தது. 10 சதவீத பணக்காரர்களிடம் இருந்து 4 சதவீத GST மட்டுமே பெறப்பட்டுள்ளது." என்று கூறிய அவர், "பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகி கொண்டிருக்கிறார்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.