பாஜக நிறுவன தினம்: பிரதமர் மோடி பேசியது என்ன
செய்தி முன்னோட்டம்
பகவான் அனுமனைப் போன்ற மனோபாவத்துடன் ஊழலை எதிர்த்துப் போராட பாஜக தீர்மானித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 6) கூறினார்.
ஹனுமன் ஜெயந்தி விழா மற்றும் பாஜக கட்சியின் 44 வது நிறுவன நாளை கொண்டாடும் வகையில் டெல்லியில் ஒரு பிரமாண்டமான நிகழ்வு இன்று நடத்தப்பட்டது.
அந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவை ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சவால்களில் இருந்து விடுவிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். ஊழலை எதிர்த்துப் போராடுவதில் 'நம்மால் முடியும்' என்ற மனோபாவத்துடன் அனுமனைப் போல் உறுதியாக இருக்க பாஜக தீர்மானித்துள்ளது." என்று கூறினார்.
டெல்லி
பாஜக நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பேசியதன் சுருக்கம்
பகவான் அனுமனைப் போல நாங்கள் சில சமயங்களில் கடினமாக இருக்கிறோம். நாங்கள் 'தேசத்திற்கு முன்னுரிமை' என்பதை எங்களின் கொள்கையாக வைத்துள்ளோம்.
நாங்கள் இந்திய தாயிக்கும், அதன் கோடிக்கணக்கான குடிமக்கள் மற்றும் அரசியலமைப்பிற்கு எங்கள் சேவையை அர்ப்பணித்துள்ளோம்.
பாஜக, பெரிய கனவுகளைக் கொண்டிருப்பதுடன் அவற்றை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது.
காங்கிரஸைப் போல் அல்லாமல், பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே பாஜகவின் அரசியல் கலாச்சாரமாகும்.
வெறுப்பை கொண்டவர்கள் பொய்களை நாடுகிறார்கள். இந்த ஊழல்வாதிகளுக்கு தற்போது வேறு வழியே இல்லாமல் இருக்கிறது. அதனால் அவர்கள், "மோடி, உனக்கு சமாதி கட்டப்படும்" என்று கூறுகிறார்கள்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒரு தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும். பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை நமது கட்சி தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும்.