நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி, சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினல் உட்பட பல உள்கட்டமைப்பு திட்டங்களை நாளை(ஏப்-8) சென்னையில் திறந்து வைக்க இருக்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனால், நகரம் முழுவதும் நாளை போக்குவரத்து நெரிசல் இருக்கலாம் என்பதால், வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
நாளை சென்னை வந்தவுடன் பிரதமர் மோடி புதிய டெர்மினலை திறந்து வைக்கிறார். இதன் முதல் கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
2,437 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த டெர்மினலின் மூலம், ஆண்டுக்கு 35 மில்லியனாக பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா
சென்னை-கோயம்புத்தூர் இடையேயான அதி விரைவு வந்தே பாரத் ரயில்
புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் 2.20 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்தை இது பூர்த்தி செய்யும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புதிய டெர்மினலின் திறப்பு விழாவை அடுத்து, சென்னை-கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த நிகழ்வு நடக்க இருக்கிறது.
சென்னை-கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் ரயிலை புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்த ரயில் 5.50 மணி நேரத்தில் இலக்கை அடைய கூடியது. இதனால் 1.20 மணிநேரம் மிச்சமாகும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.