Page Loader
சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினலைப் பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைக்கிறார்
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்ட சென்னை விமான நிலையத்தின் படம்

சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினலைப் பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைக்கிறார்

எழுதியவர் Sindhuja SM
Apr 06, 2023
06:19 pm

செய்தி முன்னோட்டம்

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்ட சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை(ஏப் 8) அன்று திறந்து வைக்க இருக்கிறார். "சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடம், 2,20,972 சதுர மீட்டர் பரப்பளவில், தமிழ்நாடு மாநிலத்தில் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு உயர்தர வசதிகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகவும் இது உள்ளது." என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.

இந்தியா

உள்ளூர் பொருளாதாரத்திற்கு பயனளிக்கும்: பிரதமர் மோடி

இந்த டெர்மினல் 1,260 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டதாகும். T-2 (Phase-1) கட்டிடம், சென்னை விமான நிலைய பயணிகளை கையாளும் திறனை வருடத்திற்கு 23 மில்லியனில் இருந்து 30 மில்லியனாக அதிகரிக்கும். புதிய டெர்மினலின் படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, சென்னையின் உள்கட்டமைப்பு வசதிகளில் இது ஒரு முக்கியமான அம்சமாக இருக்கும் என்றார். "இது இணைப்பை அதிகரிக்கும் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.