
ஊழியர்கள் சிறை செல்வார்கள்... இந்திய சட்டங்கள் குறித்து எலான் மஸ்க் பதில்!
செய்தி முன்னோட்டம்
ட்விட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் ஸ்பேஸ் மூலம் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அப்போது மஸ்க்கிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்வியில், இந்திய பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தை முடக்கியது பற்றி கேட்டறிந்தார்.
அதற்கு பதிலளித்த எலான் மஸ்க் சமூக வலைத்தளங்கள் தொடர்பான சட்டங்கள் இந்தியாவில் வலுமையாக உள்ளது. நாட்டின் சட்டங்களை தாண்டி நம்மால் செல்ல முடியாது.
அதனால் சட்டங்களை நாம் மதிக்க வேண்டும். அப்படி இல்லையெனில் எங்கள் ஊழியர்கள் சிறைக்கு செல்வார்கள் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் நாங்கள் சட்டங்கள் மதிப்பை தேர்வு செய்வோம் என கூறியுள்ளார்.
இச்சம்பவம் குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு மதக்கலவரமாக வெடித்தது. அப்போது எடுத்த ஆவணப்படத்திற்கான விளக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
BBC Journalist @JamesClayton5: BBC did a documentary on Gujarat Riots. Why was it taken down from twitter?@elonmusk: We follow laws in India or else our people go to jail. @bbc should do the same.
— Wokeflix (@wokeflix_) April 12, 2023
What a turnaround in 1 year ever since the new IT Laws have been drafted and… pic.twitter.com/iFAM5EAUCw