'மனதின் குரல்': பில் கேட்ஸ்க்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி, தனது 'மனதின் குரல்' ரேடியோ நிகழ்ச்சியின் 100வது எபிசோட்டில் நேற்று கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி 100வது பாகத்தை எட்டியதற்கு பில் கேட்ஸ் சனிக்கிழமை பாராட்டு தெரிவித்திருந்ததார். அதற்கு நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அது குறித்து பதிவிட்டிருக்கிறார். பில் கேட்ஸ் சனிக்கிழமை பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவில், "சுகாதாரம், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் தொடர்புடைய சிக்கல்களை தீர்க்க சமூகத்திற்கு 'மனதின் குரல்' ஊக்கமளித்துள்ளது. 100வது அத்தியாயத்தை அடைந்ததற்கு வாழ்த்துக்கள் நரேந்திர மோடி." என்று தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் மக்களுடன் இந்த நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்
இதற்கு இன்று பதிலளித்த பிரதமர் மோடி, "எனது நண்பர் பில் கேட்ஸ் அவர்களின் பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி. நமது பூமியை சிறப்பாக மாற்றுவதற்கான இந்திய மக்களின் உணர்வை 'மனதின் குரல்' பிரதிபலிக்கிறது. BMGF இந்தியாவின் ஆய்வில் SDGகளுடன் ஏற்படும் வலுவான மாற்றங்கள் காட்டப்பட்டுள்ளன." என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி பல நாட்களாக பேசி வரும் "மனதின் குரல்" நிகழ்ச்சியின் 100வது எபிசோட்டை இந்திய அமெரிக்கர்கள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு(உள்ளூர் நேரம்) நியூஜெர்சியில் உள்ள புலம்பெயர் மக்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேரலையில் இந்த நிகழ்ச்சியை கேட்டு மகிழ்நதார். மேலும் அவர், "இந்த நிகழ்ச்சி பிரதமர் மோடிக்கும் மக்களுக்கும் இடையே உணர்ச்சி ரீதியான தொடர்பை ஏற்படுத்தியுள்ளது" என்றும் கூறினார்.