இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
5 மாநிலங்களில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு
டெல்லி, ஹரியானா, குஜராத், சண்டிகர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான சீட்-பகிர்வு ஒப்பந்தங்களை ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் இன்று அறிவித்தன.
உத்தர பிரதேசத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி குளத்தில் கவிழ்ந்ததால் 12 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் பக்தர்கள் சென்ற டிராக்டர் டிராலி குளத்தில் கவிழ்ந்ததால் 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
கோயில்களுக்கு வரி விதிக்கும் கர்நாடக அரசின் மசோதா தோற்கடிக்கப்பட்டது
ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் வரும் கோயில்களின் வருமானத்திற்கு 10 சதவீதம் வரி விதிக்கும் மசோதா நேற்று மாலை கர்நாடக மாநில சட்டப் பேரவையில் தோற்கடிக்கப்பட்டது.
விவசாயிகளின் பேரணி பிப்ரவரி 29 வரை இடைநிறுத்தம்
பிப்ரவரி 29-ம் தேதி தங்களது 'டெல்லி சலோ' பேரணி குறித்த எதிர்கால நடவடிக்கை முடிவு செய்யப்படும் என்று விவசாயி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
ரஷ்யா போரில் கலந்துகொள்ள இந்தியர்கள் அழைக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் கலந்துக்கொள்ள ஒரு சில இந்தியர்கள் "கட்டாயப்படுத்தப்பட்டதாக" கூறப்பட்ட செய்திகளைத் தொடர்ந்து, எச்சரிக்கையுடன் செயல்படவும் என்றும் இந்த உள்நாட்டு போர் விவகாரத்திலிருந்து விலகி இருக்கவும் மத்திய அரசு, நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில், அபராதம் மட்டுமே போதாது, கூடுதலாக உரிமத்தையும் ரத்து செய்யலாமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டம்
விஜய் தனது தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகளில் இறங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலங்கானா பிஆர்எஸ் MLA லாஸ்யா நந்திதா கார் விபத்தில் பலி
தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் செகந்திராபாத் கன்டோன்மென்ட் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா, இன்று காலை ஹைதராபாத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 36.
9 -12 வகுப்பிற்கு ஓபன் புக் எக்ஸாம்: சிபிஎஸ்இ பள்ளித்தேர்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ள மாற்றங்கள்
வரும் கல்வியாண்டில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை, அதாவது ஓபன் புக் எக்ஸாம் முறையை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி காலமானார்
மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி, மும்பையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86.
கர்நாடகாவில் கோயில்கள் மீது 10% வரி விதிப்பு: மாநில அரசின் இந்து விரோதக் கொள்கை என பாஜக கண்டனம்
கர்நாடகா மாநில சட்டசபையில் நேற்று 'கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024' நிறைவேற்றப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழாவிற்கு எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மு.க.ஸ்டாலின்
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடம் ஆகிய இரண்டும் வருகிற 26ஆம் தேதி திறந்து வைக்கப்பட இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டம்: ஒருவர் பலி, 'டில்லி சலோ' ஊர்வலம் 2 தினங்களுக்கு இடைநிறுத்தம்
பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போலீஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகளின் 'டில்லி சலோ' அணிவகுப்பு இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.
குறிப்பிட்ட சில கணக்குகள் மீது நடவடிக்கை வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையில் உடன்பாடில்லை: எக்ஸ
பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளம், குறிப்பிட்ட சில கணக்குகள் மற்றும் இடுகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அவதூறு சர்ச்சை: ஏ.வி.ராஜூ மீது நடிகர் கருணாஸ் புகார்
சில தினங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு, எடப்பாடி பழனிசாமி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
ஹூக்கா பார்களுக்கும் சிகரெட் விற்பனைக்கும் தடை விதிக்க கர்நாடகா முடிவு
மாநிலம் முழுவதும் ஹூக்கா பார்களை தடை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு இன்று நிறைவேற்றியது.
ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தெரிவித்த அதிரடி கருத்து
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 161 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.
"கேரள அரசு பகலில் SFI உடனும், இரவில் PFI உடனும் செயல்படுகிறது": கேரள ஆளுநர்
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் தடைசெய்யப்பட்ட ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டியுள்ளார்.
திருமணம் செய்து கொண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட இராணுவ செவிலியருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு
திருமணம் செய்து கொண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட இராணுவ செவிலியருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
2024-25-ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அதில் சென்னை மேயர் பிரியா நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.
பிரபல வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி 91 வயதில் காலமானார்
பிரபலமான "பினாகா கீத் மாலா" நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பிரபல வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி 91 வயதில் காலமானார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
பஞ்சாப்-ஹரியானா எல்லையில் கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு: 5வது கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது அரசாங்கம்
அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பு விலையை கோரி பஞ்சாப்-ஹரியானா எல்லை வழியாக டெல்லிக்கு பேரணியாக செல்ல விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர்.
டெல்லி, புனேயில் 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 'மியாவ் மியாவ்' போதைப்பொருள் பறிமுதல்
இரண்டு நாட்களாக நடந்த மாபெரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புனே மற்றும் புது டெல்லி முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 1,100 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான மெபெட்ரோனை(MD) காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
'அமைதியான போராட்டம்': 1200 டிராக்டர்கள், புல்டோசர்களுடன் இன்று டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் திட்டம்
பஞ்சாபிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று தங்கள் 'டெல்லி சலோ' பேரணியை மீண்டும் தொடங்க உள்ளனர்.
பிரபல சட்ட அறிஞர் ஃபாலி எஸ் நாரிமன் தனது 95வது வயதில் காலமானார்
பிரபல சட்ட நிபுணரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான ஃபாலி எஸ் நாரிமன் காலமானார். அவருக்கு வயது 95.
அவதூறு வழக்கு: சிறிது நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்த பின் ஜாமீனில் வெளிவந்தார் ராகுல் காந்தி
பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா 2018 இல் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உத்தரபிரதேச உள்ளூர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: 28-ஆம் தேதி தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி
2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வருகிற 27-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 105 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.
சண்டிகர் மேயராக அறிவிக்கப்பட்டார் ஆம் ஆத்மி வேட்பாளர்: 'சட்டவிரோத' வாக்கெடுப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
சண்டிகர் மேயர் தேர்தல் முடிவுகளை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்ததை அடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்கு (AAP) ஒரு பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
10% இடஒதுக்கீட்டிற்கான மராத்தா இடஒதுக்கீடு மசோதாவுக்கு மகாராஷ்டிரா சட்டசபை ஒப்புதல்
மராட்டிய சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மகாராஷ்டிர சட்டசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான சர்ச்சை குறித்து இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ்க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிரித்த முகத்துடன் இருப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மணமகன் பலி
திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு "ஸ்மைல்-என்ஹான்ஸ்மென்ட்" அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஹைதராபாத்தை சேர்ந்த மணமகன் பலியாகியுள்ளார்.
"ரஷ்யா எங்கள் நலன்களுக்கு எதிராக ஒருபோதும் நடந்ததில்லை": வெளியுறவுத்துறை அமைச்சர்
இந்தியாவும் ரஷ்யாவும் "நிலையான மற்றும் மிகவும் நட்பான" உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், ரஷ்யா எங்கள் நலன்களுக்கு எதிராக ஒருபோதும் நடந்ததில்லை என்றும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் EPS வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த மர்ம நபர்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமியின் வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
ரூ.84,000 லஞ்சம் வாங்கிய தெலுங்கானா அதிகாரி பிடிபட்டவுடன் கதறி அழுததால் வைரல்
ரூ.84,000 லஞ்சம் வாங்கியதற்காக கையும் களவுமாக பிடிபட்ட தெலுங்கானா பழங்குடியினர் நலப் பொறியியல் துறையைச் சேர்ந்த செயல் பொறியாளர் நேற்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்
தமிழக அரசின் இந்தாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை தாக்கல் செய்தார்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியாகிறது; பதிவிறக்கம் செய்வது எப்படி?
12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.