Page Loader
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி காலமானார்
மனோகர் ஜோஷி, இன்று அதிகாலை 3.02 மணியளவில் அவர் மரணமடைந்தார்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி காலமானார்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 23, 2024
08:36 am

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி, மும்பையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86. முன்னதாக மனோகர் ஜோஷி, பிப்ரவரி 21-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதால் ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.02 மணியளவில் அவர் மரணமடைந்தார். மனோகர் ஜோஷியின் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் தொடங்கும் என்றும், அவரது உடல், அரசு மரியாதையுடன் தாதர் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்றும் மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மனோகர் ஜோஷி, மகாராஷ்டிராவில் சிவசேனா-பாஜக கூட்டணியின் கீழ் 1995-1999 வரை முதல்வராக பதவி வகித்தார். 2002- 2004 வரை மக்களவை சபாநாயகராக இருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

மனோகர் ஜோஷி காலமானார்