Page Loader
"கேரள அரசு பகலில் SFI உடனும், இரவில் PFI உடனும் செயல்படுகிறது": கேரள ஆளுநர் 

"கேரள அரசு பகலில் SFI உடனும், இரவில் PFI உடனும் செயல்படுகிறது": கேரள ஆளுநர் 

எழுதியவர் Sindhuja SM
Feb 21, 2024
05:03 pm

செய்தி முன்னோட்டம்

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் தடைசெய்யப்பட்ட ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டியுள்ளார். NDTV-யிடம் பேசிய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயனின் நிர்வாகத்தின் மீது கடுமையாக தாக்கி பேசியதோடு, "பகலில் அவர்கள்(கேரள அரசு) SFI உடன் இருக்கிறார்கள். இரவில் அவர்கள் PFI க்காக வேலை செய்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். "கேரள மக்களிடமிருந்து இது குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது மட்டுமே என்னிடம் இருக்கு ஆதாரம். இப்போது என்னால் உங்களுக்கு சரியான பெயர்களைக் கொடுக்க முடியாது. ஆனால் (மத்திய) ஏஜென்சிகளிடம் இந்தத் தகவல் உள்ளது," என்றும் அவர் கூறியுள்ளார்.

கேரளா

 கேரள அரசுக்கும் அம்மாநில ஆளுநருக்கும் இடையே நடந்து வரும் மோதல் 

பல்கலைக்கழகங்களில் அதிகாரிகளை நியமனம் செய்வதில் ஆளும் கேரள அரசுக்கும் அம்மாநில ஆளுநருக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. ஆளும் சிபிஐ(எம்) கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பு( SFI) தொடர்ந்து ஆளுநர் செல்லும் இடத்திற்கெல்லாம் சென்று அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது. அதனால், ஆத்திரமடைந்த கேரள ஆளுநர் சமீபத்தில் நடு ரோட்டில் நாற்காலியை போட்டு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் ராஜ்பவனுக்கும் ஆளுநருக்கும் Z+ பாதுகாப்பை வழங்கியது. இந்நிலையில், கேரள அரசுக்கும் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) என்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டியுள்ளார்.