டெல்லி, புனேயில் 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 'மியாவ் மியாவ்' போதைப்பொருள் பறிமுதல்
செய்தி முன்னோட்டம்
இரண்டு நாட்களாக நடந்த மாபெரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புனே மற்றும் புது டெல்லி முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 1,100 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான மெபெட்ரோனை(MD) காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
இதன் மதிப்பு 2,500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று அளவிடப்பட்டுள்ளது.
புனேவில் மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ததன் மூலம் இந்த நடவடிக்கை தொடங்கியது, அதனுடன் 700 கிலோ மெபெட்ரோனும் கைப்பற்றப்பட்டது.
அந்த நபர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், டெல்லியின் ஹவுஸ் காஸ் பகுதியில் உள்ள குடோன் போன்ற அமைப்புகளில் இருந்து கூடுதலாக 400 கிலோ செயற்கை ஊக்க மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லி
ஐந்து நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்
அதன் பின், புனேவில் குறிப்பாக குர்கும்ப் எம்ஐடிசி பகுதியில் சேமிக்கப்பட்டிருந்த மெபெட்ரோனின் மற்றொரு பதுக்கல் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது.
இது புனே காவல்துறையால் நடத்தப்பட்ட மிகப்பெரும் போதைப்பொருள் நடவடிக்கையாகும். மேலும், நாட்டிலேயே பிடிபட்ட மிகப்பெரும் போதைப்பொருள் கும்பவல்களில் இதுவும் ஒன்றாகும்.
குர்கும்ப் எம்ஐடிசி பகுதியில் உள்ள யூனிட்களில் இருந்து புது டெல்லியில் இருக்கும் சேமிப்புக் கிடங்குகளுக்கு கடத்தல் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய மூன்று கூரியர்கள் மற்றும் தற்போது விசாரணையில் உள்ள இருவர் உட்பட ஐந்து நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமாரால் "கூரியர் பாய்ஸ்" என்று வர்ணிக்கப்படும் கைது செய்யப்பட்ட நபர்கள், மீது ஏற்கனேவே பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உள்ளன.