9 -12 வகுப்பிற்கு ஓபன் புக் எக்ஸாம்: சிபிஎஸ்இ பள்ளித்தேர்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ள மாற்றங்கள்
வரும் கல்வியாண்டில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை, அதாவது ஓபன் புக் எக்ஸாம் முறையை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 29,009 பள்ளிகள் இயங்கி வருகின்றன. அப்பள்ளிகளில் தேசியக் கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு முறை உட்பட பல்வேறு அம்சங்களில் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது, சிபிஎஸ்இ. அந்த வகையில், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஓபன் புக் தேர்வு முறை, அதாவது புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை கொண்டு வருவதற்கு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநில அரசிற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள மத்திய கல்வி இயக்குனரகம்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9,10ஆம் வகுப்புகளுக்கான ஆங்கிலம்,கணிதம், அறிவியல் பாடங்களுக்கும், 11, 12-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலம், கணிதம், உயிரியல் பாடங்களுக்கும் புத்தகம் பார்த்துதேர்வு எழுதும் நடைமுறையைஅமல்படுத்த திட்டமிடபட்டுள்ளது. சோதனை அடிப்படையில், சில பள்ளிகளில், நவம்பர், டிசம்பரில் இது போன்ற தேர்வுகளை நடத்தி பகுப்பாய்வுகள் செய்யப்பட்டு, பின்னர் இத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய கல்வி இயக்குனரகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையின்போது, Pre-KGக்கு மூன்று வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும், 1ஆம் வகுப்பு சேர்க்க வேண்டும் எனில் மாணவர்களுக்கு ஆறு வயது நிரம்பியிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 3, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு புதிய கல்வி கொள்கை நடைமுறைக்கு வருகிறது