சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
2024-25-ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அதில் சென்னை மேயர் பிரியா நிதிநிலை அறிக்கையை வாசித்தார். அறிக்கையில், இந்த நிதியாண்டுக்கான 82 முக்கிய அறிவிப்புகளையும் அவர் அறிவித்தார். அவற்றில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5ஆம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கும், ஒரு ஜோடி ஷூ, 2 ஜோடி சாக்ஸ் வழங்க ரூ.3.59 கோடி நிதி ஒதுக்கீடு 255 பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காக ரூ.7.46 கோடி ஒதுக்கீடு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 419 மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 1,20,175 மாணவர்களுக்கு, ஐடி கார்டு வழங்குவதற்காக ரூ.61 லட்சம் நிதி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட்டை சார்ந்து வெளியான மாநகராட்சி பட்ஜெட்
மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க தகுதி பெற்ற உளவியல் நிபுணர் நியமிக்கப்பட ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கூடுதலாக தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்க ரூ.1.16 கோடி ஒதுக்கீடு திறமைமிக்க மாணவர்களுக்கு STEM பயிற்சி வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு. 338 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்க ரூ.92.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்று மீண்டும் சென்னை பள்ளிகளிலேயே தொடர்ந்து 11ம் வகுப்பு சேர்ந்து பயிலும் 50 மாணவர்களை, இஸ்ரோ போன்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.10 லட்சம் ஒதுக்கீடு. பெண்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும். இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு