Page Loader
கர்நாடகாவில் கோயில்கள் மீது 10% வரி விதிப்பு: மாநில அரசின் இந்து விரோதக் கொள்கை என பாஜக கண்டனம்
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

கர்நாடகாவில் கோயில்கள் மீது 10% வரி விதிப்பு: மாநில அரசின் இந்து விரோதக் கொள்கை என பாஜக கண்டனம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 22, 2024
03:13 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகா மாநில சட்டசபையில் நேற்று 'கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024' நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் கோயில்களின் வருமானத்தில், 10% வரியாக மாநில அரசு வசூலிக்கலாம். இந்த சட்டம் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசின் இந்து விரோத போக்கை காட்டுவதாக பாஜக சாடியுள்ளது. இதுகுறித்து எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ள கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, இந்த மசோதா மூலம் காங்கிரஸ் அரசாங்கம் தனது 'காலி கஜானாவை' நிரப்ப முயற்சிப்பதாகக் கூறியுள்ளார். மாநில அரசு ஏன் இந்து கோவில்களில் இருந்து மட்டும் வருமானம் ஈட்டப் பார்க்கிறது என்றும் மற்ற மத ஸ்தலங்களில் இருந்து இப்படி வசூலிக்கவில்லையே என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார்

embed

பாஜக கண்டனம்

#BJP Slams #Karnataka Government for 10 Percent #Tax on #Temples. The BJP called the #Congress Government in Karnataka "Anti-Hindu"— BNN-BHARAT NEWS NETWORK (भारत उदन्त जालम्) (@bnn_bharat) February 22, 2024