Page Loader
உத்தர பிரதேசத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி குளத்தில் கவிழ்ந்ததால் 12 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி குளத்தில் கவிழ்ந்ததால் 12 பேர் பலி

எழுதியவர் Sindhuja SM
Feb 24, 2024
01:21 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் பக்தர்கள் சென்ற டிராக்டர் டிராலி குளத்தில் கவிழ்ந்ததால் 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். மக பூர்ணிமாவை முன்னிட்டு புனித நீராடுவதற்காக பக்தர்கள் கங்கை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி மக்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டதுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார்.

ட்விட்டர் அஞ்சல்

டிராக்டர் டிராலி குளத்தில் கவிழ்ந்ததால் 12 பேர் பலி