
முன்னாள் முதலமைச்சர் EPS வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த மர்ம நபர்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமியின் வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நபரை மடக்கி பிடித்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
எடப்பாடி பழனிச்சாமியின் அரசாங்க இல்லம் பசுமைவழி சாலையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், இன்று வெளியில் சென்றிருந்த எடப்பாடி பழனிசாமி, தனது காரில் வீட்டிற்குள் நுழைந்த போது, வீட்டின் காம்பௌண்ட் அருகே பதுங்கி இருந்த மர்மநபர், அந்த காருடனே வீட்டிற்குள் ஓடினார்.
இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு அதிகரிகள் உடனடியாக சுதாரித்து, அந்த மர்ம நபரை ஓடிச் சென்று மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து அவரை அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
மர்மநபரால் பரபரப்பு
#BREAKING || இபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் @EPSTamilNadu#Chennai #EPS #ADMK #House pic.twitter.com/DLYSd4vXIO
— Savukku Shankar Army (@Mahi1987Mass) February 20, 2024