
அவதூறு சர்ச்சை: ஏ.வி.ராஜூ மீது நடிகர் கருணாஸ் புகார்
செய்தி முன்னோட்டம்
சில தினங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு, எடப்பாடி பழனிசாமி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, கூவத்தூரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபொழுது எம்எல்ஏ ஒருவர் தனக்கு"அந்த ஒரு டாப் நடிகை தான் வேண்டும்" என்று கூறியதாகவும், அந்த நடிகையின் பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
அந்த நடிகையை அழைத்துவர ஏற்பாடு செய்தது, எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் தான் என அதே வீடியோவில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த விவரகத்தில் கருணாஸ்,"எந்தவித ஆதாரமுமின்றி முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ பேசியுள்ளார். நடிகை குறித்தும், தன்னை பற்றியும் உண்மைக்கு மாறாக ஏ.வி.ராஜூ அவதூறு கருத்துக்களை பரப்பியுள்ளார்" என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
புகார் தெரிவித்த கருணாஸ்
ஏ.வி.ராஜூ பேச்சு - நடிகர் கருணாஸ் புகார்
— Thanthi TV (@ThanthiTV) February 21, 2024
கூவத்தூர் குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவின் பேச்சு சர்ச்சையான விவகாரம்
"தனது பெயரை கெடுக்கும் நோக்கில் எந்தவித ஆதாரமுமின்றி முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ பேசியுள்ளார்"
"நடிகை குறித்தும், தன்னை பற்றியும் உண்மைக்கு… pic.twitter.com/C94jq72lFe