குறிப்பிட்ட சில கணக்குகள் மீது நடவடிக்கை வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையில் உடன்பாடில்லை: எக்ஸ
பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளம், குறிப்பிட்ட சில கணக்குகள் மற்றும் இடுகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனினும், மத்திய அரசின் கோரிக்கைகளுக்கு உடன்படவில்லை என்றும், கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் இடுகைகளை நிறுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது. எக்ஸ்-இன் (முன்னர் ட்விட்டர்) உலகளாவிய அரசாங்க விவகாரங்கள் குழு, அவர்கள் சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக மத்திய அரசு கூறியிருந்த நிர்வாக உத்தரவுகளை வெளியிட முடியவில்லை, ஆனால் "வெளிப்படைத்தன்மைக்கு அவற்றைப் பகிரங்கப்படுத்துவது அவசியம் என்று நம்புகிறோம்" என்று கூறியது. நேற்று நள்ளிரவு எக்ஸ்-இல் வெளியிடப்பட்ட இந்த இடுகையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை.
மத்திய அரசு என்ன கோரியது?
"குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் இடுகைகளுக்கு எதிராக எக்ஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பிடத்தக்க அபராதம் மற்றும் சிறைத்தண்டனை உட்பட அபாரதங்களை விதிக்குமாறு கேட்டுக்கொண்டது" என்று அந்த இடுகை கூறுகிறது. "ஆணைகளுக்கு இணங்க, நாங்கள் இந்தியாவில் மட்டும் இந்த கணக்குகள் மற்றும் இடுகைகளை நிறுத்தி வைப்போம்; இருப்பினும், இந்த நடவடிக்கைகளுடன் நாங்கள் உடன்படவில்லை" என்று அது மேலும் கூறியது. "எங்கள் நிலைப்பாட்டிற்கு இணங்க, இந்திய அரசாங்கத்தின் தடை உத்தரவுகளை சவால் செய்யும் ரிட் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. எங்கள் கொள்கைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு வழங்கியுள்ளோம்." எனவும் அந்த நீண்ட பதிவு தெரிவித்துள்ளது