NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

    சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 20, 2024
    04:03 pm

    செய்தி முன்னோட்டம்

    சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான சர்ச்சை குறித்து இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ்க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சண்டிகர் மேயர் தேர்தலின் போது எழுந்த குற்றசாட்டுகளை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இன்று விசாரித்தது.

    சமீபத்தில் நடந்த சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ்குமார் சோங்கர் வெற்றி பெற்றார்.

    எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளரின் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் தோற்கடிக்கப்பட்டார்.

    8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு எதிராக பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தை ஆம் ஆத்மி அணுகியது.

    உச்ச நீதிமன்றம்

    எட்டு "செல்லாத" வாக்குகளை ஆய்வு செய்ய உத்தரவு 

    ஓய்வுபெற்ற நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமார் மனு தாக்கல் செய்தார்.

    ஆனால், அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன்பிறகு, அவர் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

    இன்று இந்த பிரச்சனையை விசாரித்த உச்ச நீதிமன்றம், எட்டு "செல்லாத" வாக்குகளை ஆய்வு செய்து, அது உண்மையிலேயே செல்லுபடியாகுமா அல்லது செல்லுபடியாகாதா என்பது அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    குறிப்பிடப்படாத காரணங்களுக்காக தேர்தல் அதிகாரி நிராகரித்த 8 வாக்குகளையும் சேர்த்து எண்ணினால் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணி சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சண்டிகர்
    பாஜக
    ஆம் ஆத்மி
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    சண்டிகர்

    சண்டிகர் மேயர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணிக்கு எதிரான முதல் தேர்தல் போரில் பாஜக வெற்றி  பாஜக
    "ஜனநாயகத்தின் கொலை": சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு உச்ச நீதிமன்றம்
    சண்டிகர் தேர்தல் அதிகாரி மீது வழக்கு தொடர வேண்டும்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்  உச்ச நீதிமன்றம்

    பாஜக

    நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கங்கனா ரனாவத்? பாலிவுட்
    YearRoundup 2023- இந்த ஆண்டு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்கள் இந்திய ராணுவம்
    நிதீஷ்குமாரின் "ஹிந்தி தேசிய மொழி" பேச்சுக்கு சத்குரு கண்டனம் சத்குரு
    நாடாளுமன்றத்தில் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம், மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வு நாடாளுமன்றம்

    ஆம் ஆத்மி

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: 7 நாள் ED காவலில் சிசோடியா இந்தியா
    மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக புதிய ஊழல் வழக்கை பதிவு செய்த CBI இந்தியா
    டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு டெல்லி
    மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது டெல்லி

    உச்ச நீதிமன்றம்

    'சட்டத்தை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது' - இந்திய தலைமை நீதிபதி  தமிழக அரசு
    சட்டம் பேசுவோம்: மரண தண்டனைக்கு எதிராக வலுக்கும் குரல்கள்  சட்டம் பேசுவோம்
    மத்திய பிரதேசம்: தனது காதலியை கரம் பிடிப்பதற்காக பாலினத்தை மாற்றி கொண்ட திருநம்பி மத்திய பிரதேசம்
    'திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை': நீதிமன்றம்  சட்டம் பேசுவோம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025