Page Loader
பிரபல வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி 91 வயதில் காலமானார்

பிரபல வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி 91 வயதில் காலமானார்

எழுதியவர் Sindhuja SM
Feb 21, 2024
01:26 pm

செய்தி முன்னோட்டம்

பிரபலமான "பினாகா கீத் மாலா" நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பிரபல வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி 91 வயதில் காலமானார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இந்த தகவலை அவரது மகன் ரஜில் சயானி தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை இரவு அமீன் சயானிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. "எச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் இரவு 7:00 மணியளவில் மாரடைப்பால் அவர் காலமானார்" என்று ரஜில் சயானி பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிடம் கூறிள்ளார். ரேடியோ சிலோனில் சில நிகழ்ச்சியில் பேசி புகழ்பெற்ற அவரது குரல் இன்னும் பல நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அவர் மும்பையில் ஒரு பன்மொழி குடும்பத்தில் டிசம்பர் 21, 1932 இல் பிறந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

அமீன் சயானிக்கு பிரதமர் மோடி இரங்கல் 

அமீன் சயானி

அமீன் சயானி குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பிரதமர் மோடி கூறியதாவது:

"வானொலியில் ஒரு வசீகரத்தையும் அரவணைப்பையும் கொண்டிருந்த ஸ்ரீ அமீன் சயானி ஜியின் தங்கக் குரல் தலைமுறை தலைமுறையாக வந்த மக்களை கவர்ந்திழுந்தது. அவரது பணியின் மூலம், இந்திய ஒளிபரப்பில் புரட்சியை ஏற்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், வானொலி ஆர்வலர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்." என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.