இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

06 Mar 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

நேற்று தென் தமிழகத்தில் இருந்து வடக்கு உள் கர்நாடகா வரை நிலவிய கீழடுக்கு சுழற்சி தென் தமிழகத்தில் இருந்து உள் கர்நாடகா வரை கடல் மட்டத்தில் இருந்து 0.9 கிமீ உயரத்தில் நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் 

மார்ச் 1ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் வெடிகுண்டு வைத்த குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று அறிவித்துள்ளது.

சந்தேஷ்காலி பெண்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி: மம்தா பானர்ஜி அரசுக்கு கடும் கண்டனம் 

மேற்கு வங்க பெண்கள் கோபமடைந்துள்ளனர், சந்தேஷ்காலியில் தொடங்கிய புயல் அந்த கிராமத்தில் மட்டும் இருக்காமல் மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார்.

சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

இந்த ஆண்டு தொடக்கத்தில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை மாலை 4.15 மணிக்குள் சிபிஐயிடம் ஒப்படைக்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்க அரசுக்கு புதன்கிழமை மீண்டும் உத்தரவிட்டது.

"என் வீட்டு கிணறும் வறண்டுவிட்டது": பெங்களூரு தண்ணீர் நெருக்கடி குறித்து பேசிய டி.கே.சிவக்குமார் 

பெங்களூருவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கர்நாடகா போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

ஆன்லைன் மோசடி, போதை பொருள் கும்பலிடம் இருந்து தப்பிய சென்னை பெண் 

சில தினங்களுக்கு முன்னர் குருகிராமில் வசிக்கும் இருவர், சைபர் மோசடி செய்பவர்களால் கிட்டத்தட்ட ரூ. 2 கோடி இழந்த செய்தி வெளியான நிலையில்,சென்னையைச் சேர்ந்த லாவண்யா மோகன் என்ற மார்க்கெட்டிங் நிபுணர் ஒருவரும், தானும் அதேபோன்றதொரு மோசடி கும்பலிடம் ஏமாற இருந்ததாகவும், சற்று சுதாரித்ததால் தப்பித்ததாகவும் கூறியுள்ளார்.

06 Mar 2024

சின்மயி

ஸ்பெயின் பெண்மணி கற்பழிக்கபட்ட விவகாரத்தில் பாடகி சின்மயி காட்டம்

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் ஸ்பெயின் சுற்றுலாப் பயணி ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.

மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட இருப்பதாக தகவல் 

2002 முதல் ராகுல் காந்தி போட்டியிட்டு வரும் அதே அமேதி தொகுதியில் இருந்து இந்த மக்களவை தேர்தலிலும் அவர் போட்டியிட போவதாக உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

06 Mar 2024

இந்தியா

கார்பெட் புலிகள் காப்பகத்தில் மரம் வெட்டப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஜிம் கார்பெட் புலிகள் காப்பகத்தில் சட்டவிரோதமாக கட்டுமானம் செய்யவும் மரங்களை வெட்டவும் அனுமதித்த உத்தரகாண்ட் முன்னாள் வனத்துறை அமைச்சர் ஹரக்சிங் ராவத் மற்றும் முன்னாள் பிரதேச வன அதிகாரி கிஷன் சந்த் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க மறுத்தது மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தின் சந்தேஷ்காலியில் மிரட்டி பணம் பறித்தல், நில அபகரிப்பு மற்றும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் திரிணாமுல் பிரமுகர் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசு மறுத்துவிட்டது.

06 Mar 2024

இந்தியா

இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள மெட்ரோவை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு(UTs) 10 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பறிபோன பொன்முடியின் MLA பதவி; விரைவில் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்

நீதிமன்ற உத்தரவு காரணமாக திமுகவின் பொன்முடி, தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான பதவியை இழந்த நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.

06 Mar 2024

புதுவை

புதுவை சிறுமி கொலை வழக்கில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல்; இருவர் கைது 

புதுச்சேரியில் கடந்த சனிக்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது 9 வயது சிறுமி மாயமான சில நாட்களில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அருகிலிருந்து ஓடையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

05 Mar 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

நேற்று மத்திய பிரதேசத்தில் இருந்து வடக்கு தமிழகம் வரை கடல் மட்டத்தில் இருந்து 0.9 கிமீ உயரத்தில் நிலவிய கீழடுக்கு சுழற்சி இன்று குறைந்துள்ளது.

05 Mar 2024

சென்னை

சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மருந்துக்கடைகளில் CCTV கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு

சென்னை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்து மருந்து கடைகளிலும் CCTV கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் உத்தரவிட்டுள்ளார்.

 ராஜினாமா செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் சேர போவதாக அறிவிப்பு 

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங்களில், பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக தெரிவித்தார்.

05 Mar 2024

தமிழகம்

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 4027 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிப்பு

தமிழகத்தில் உள்ள ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்துார் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 1.21 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 4,027 பேருக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் பல அமைச்சர்களுக்கு இன்று மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

05 Mar 2024

இஸ்ரேல்

இஸ்ரேல் எல்லையில் வாழும் தனது நாட்டு மக்களுக்கு இந்தியா அறிவுரை 

இஸ்ரேல் - லெபனான் எல்லைக்கு அருகே நடந்த ஏவுகணைத் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு மத்திய அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.

05 Mar 2024

எய்ம்ஸ்

நேற்று பிரதமர் வருகை; இன்று எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவக்கம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

கர்நாடக துணை முதல்வர் மீதான பணமோசடி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் 

காங்கிரஸ் தலைவரும் கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவகுமாருக்கு எதிரான 2018 பணமோசடி வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஸ்பெயின் பெண்ணின் கணவரிடம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

பிரதமரை நேரில் சந்தித்த PTR பழனிவேல் தியாகராஜன்; காரணம் என்ன?

கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்த போது, மதுரையில் அவரை நேரில் சந்தித்தது எதற்காக என்பதை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் PTR பத்திரிகையாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

05 Mar 2024

விசிக

ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை கட்சியிலிருந்து நீக்கிய விசிக

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நீக்குவதாக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிறைக்கைதிகளுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதிகள் சிறைக்கைதிகளை தீவிரவாதிகளாக மாற்றியது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை(NIA) இன்று பல இடங்களில் சோதனை நடத்தியது.

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டில் சோதனை செய்யும் என்ஐஏ

கடந்த வார இறுதியில் பெங்களுருவில் உள்ள பிரபல ஹோட்டலான ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த விவகாரத்தில், வழக்கின் விசாரணை மத்திய புலனாய்வு துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யகோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை தனது கட்சிக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்க கால அவகாசம் கோரியது எஸ்பிஐ 

தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

04 Mar 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழக வானிலை: மத்திய பிரதேசத்தில் இருந்து வடக்கு கர்நாடகா வரை கடல் மட்டத்தில் இருந்து 0.9 கிமீ உயரத்தில் நேற்று நிலவிய கீழடுக்கு சுழற்சி இன்று, மத்திய பிரதேசத்தில் இருந்து வடக்கு தமிழகம் வரை நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

04 Mar 2024

டெல்லி

ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சி தனது தலைமையகத்தை காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி உயர் நீதிமன்றத்துக்கு சொந்தமான நிலத்தில் உள்ள தங்கள் தலைமையகத்தை காலி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நந்தனத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்தார் பிரதமர் மோடி 

பிரதமர் மோடி, கல்பாக்கத்தில் அணுமின் நிலையத்தில், விரைவு பெருக்கி உலை திட்டத்தை திறந்து வைத்துவிட்டு, ஹெலிகாப்டர் மூலம் சென்னை வந்தடைந்தார்.

மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் அருங்காட்சியகத்தை நாளை மறுதினம் முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில், கலைஞர் அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது.

04 Mar 2024

இந்தியா

பிரதமருக்கு சொந்தமாக குடும்பம் இல்லை என்று கூறிய லாலு பிரசாத்துக்கு பதிலடி: 'மோடியின் குடும்பம்' என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ள முக்கிய தலைவர்கள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் இன்று தங்கள் ட்விட்டர் கணக்குகளில் "மோடி கா பரிவார்"(மோடியின் குடும்பம்) என்ற முழக்கத்தைச் சேர்த்துள்ளனர்.

பெங்களூரு குண்டுவெடிப்பு: வெடி குண்டு வைப்பதற்கு முன் 9 நிமிடம் கஃபேக்குள் அமர்ந்திருந்த சந்தேக நபரின் வீடியோ 

கடந்த வாரம் பெங்களூருவில் உள்ள ஒரு பிரபலமான ஓட்டலில் வெடிகுண்டு வைத்த சந்தேக நபர், ஓட்டலை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ஒன்பது நிமிடங்கள் உள்ளே இருந்தார் என்பது சிசிடிவி வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் மீதான வழக்கை மார்ச் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்

சனாதன கொள்கை மீதான உதயநிதியின் கருத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

04 Mar 2024

டெல்லி

 மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 நிதியுதவியை அறிவித்தது டெல்லி அரசு

டெல்லி நிதியமைச்சர் அதிஷி திங்களன்று 'முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா' திட்டத்தை அறிவித்தார்.

04 Mar 2024

இந்தியா

'ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும் எம்.பி.க்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாராட்டத்தக்கது': பிரதமர் மோடி 

சபையில் ஓட்டளிக்க லஞ்சம் வாங்குவது , சட்டமன்றத்தில் பேசுவதற்கு பணம் வாங்குவது போன்ற வழக்குகளில் இருந்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் விடுபட முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும் வழக்குகளில் எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கு விலக்கு கிடையாது: உச்ச நீதிமன்றம் 

சபையில் ஓட்டளிக்க லஞ்சம் வாங்குவது , சட்டமன்றத்தில் பேசுவதற்கு பணம் வாங்குவது போன்ற வழக்குகளில் இருந்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் விடுபட முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.

04 Mar 2024

இந்தியா

இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா என்ற கேள்விக்கு வெளியுறவு அமைச்சர் கூறிய பதில் 

இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "ஒரு கொடுமைப்படுத்தும் நாடு, அண்டை நாடுகள் துன்பத்தில் இருக்கும்போது 4.5 பில்லியன் டாலர் உதவி வழங்காது" என்று கூறியுள்ளார்.