மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 நிதியுதவியை அறிவித்தது டெல்லி அரசு
டெல்லி நிதியமைச்சர் அதிஷி திங்களன்று 'முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா' திட்டத்தை அறிவித்தார். இதன் கீழ் 2024-25 நிதியாண்டு முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. அதிஷி தனது முதல் பட்ஜெட் உரையில் இந்த திட்டத்தை அறிவித்தார். "கெஜ்ரிவால் அரசு 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும். முக்யம்நாத்ரி மகிளா சம்மான் யோஜனாவின் கீழ், பெண்களுக்கு இந்த நன்மை வழங்கப்படும்," என்று அவர் கூறினார். 76,000 கோடி செலவில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை டெல்லி சட்டசபையில் இன்று அதிஷி தாக்கல் செய்தார். மேலும் 'ராம ராஜ்ஜியம்' என்ற கனவை நனவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த திட்டம் குறித்து பேசிய முதல்வர் கெஜ்ரிவால்
'பெண்கள் பணத்திற்காக யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை': டெல்லி முதல்வர்
"... டெல்லி பெண்களுக்காக இன்று ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் உலகின் மிகப்பெரிய திட்டமாக இது இருக்கும். இனி பணத்திற்காக யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும்." என்று டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். இத்திட்டத்தில் பயன்பெற இருக்கும் பெண்கள்:- 1.வரி செலுத்துபவர் அல்லாதவர்கள் 2. எந்த அரசு ஓய்வூதியத் திட்டத்திலும் இல்லாதவர்கள் 3. அரசு ஊழியர் அல்லாதவர்கள் 4. டெல்லியில் வாசியாக இருப்பவர்கள் மேலே உள்ளவற்றை நிரூபிக்க ஒரு படிவத்தை பூர்த்தி செய்து, வங்கி விவரங்கள் மற்றும் ஆதார் அட்டை விவரங்களை அரசாங்கத்திற்கு வழங்கிய பின் இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெறலாம்.