LOADING...
நேற்று பிரதமர் வருகை; இன்று எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவக்கம்
எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவக்கம்

நேற்று பிரதமர் வருகை; இன்று எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 05, 2024
02:56 pm

செய்தி முன்னோட்டம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப்பணிகள் துவங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2019 ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதைய மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது, இன்னும் 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியளித்து இருந்தார் பிரதமர். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எய்ம்ஸ் மருத்துமனை கட்டுவதற்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என கூறினார்.

embed

எய்ம்ஸ் கட்டுமான பணிகள்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடக்கம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவக்கம் 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் 5 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுமான பணிகள் துவக்கம்#maduraiaiims | #madurai | #thanthitv pic.twitter.com/mhWbp4DlV8— Thanthi TV (@ThanthiTV) March 5, 2024