"என் வீட்டு கிணறும் வறண்டுவிட்டது": பெங்களூரு தண்ணீர் நெருக்கடி குறித்து பேசிய டி.கே.சிவக்குமார்
பெங்களூருவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கர்நாடகா போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். தனது வீட்டில் உள்ள ஆழ்துளை கிணறு உட்பட நகரில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட போர்வெல்கள் வறண்டுவிட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார். "எனது வீட்டில் உள்ள போர்வெல் உட்பட அனைத்து போர்வெல்களும் வறண்டு கிடக்கின்றன." என்று கூறியுள்ளார். தண்ணீர் கிடைக்கும் அனைத்து இடங்களையும் அடையாளம் காண அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
"மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு உதவவில்லை": கர்நாடக துணை முதல்வர்
"இதை நான் மிக மிக மிக தீவிரமான விஷயமாக பார்த்து வருகிறேன். அனைத்து அதிகாரிகளுடனும் ஒரு கூட்டம் நடத்தினேன். அனைத்துத் தொட்டிகளையும் கையகப்படுத்தி தண்ணீர் கிடைக்கும் இடங்களை அடையாளம் கண்டு வருகிறோம். இருநூற்றுப் பதினேழு சுரங்கப் பாதைகளில் முயற்சி செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவில் 3,000க்கும் மேற்பட்ட போர்வெல்கள் வறண்டுவிட்டன. காவிரியில் என்ன தண்ணீர் கிடைக்கிறதோ, அதுதான் வரும்...'' என்று அவர் கூறியுள்ளார். மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு உதவவில்லை என்றும் துணை முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். "நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறோம். அதனால்தான் மேகதாது திட்டத்திற்காக நாங்கள் தண்ணீருக்காக போராடினோம். மேகதாது பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு இனியாவது எங்களை காப்பாற்றும் என்று நம்புகிறேன்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.