
இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா என்ற கேள்விக்கு வெளியுறவு அமைச்சர் கூறிய பதில்
செய்தி முன்னோட்டம்
இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "ஒரு கொடுமைப்படுத்தும் நாடு, அண்டை நாடுகள் துன்பத்தில் இருக்கும்போது 4.5 பில்லியன் டாலர் உதவி வழங்காது" என்று கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம், "இந்திய துணைக் கண்டத்திலும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா?" என்று கேட்கப்பட்டது.
அப்போது பதிலளித்த அவர், அண்டை நாடுகள் துன்பத்தில் இருக்கும்போது இந்தியா 4.5 பில்லியன் டாலர் உதவி வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா
இந்தியா அண்டை நாடாவுகளுக்கு செய்து வரும் உதவிகள்
"இந்தியா ஒரு பெரிய கொடுமைக்காரனாகப் பார்க்கப்படுகிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள். அண்டை நாடுகள் பிரச்சனையில் இருக்கும்போது பெரிய கொடுமைக்காரர்கள் நான்கரை பில்லியன் டாலர்களை வழங்குவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். கோவிட்-19 தொற்றுநோய் இருந்த காலகட்டத்தில் பெரிய கொடுமைப்படுத்தும் நாடாக இருந்திருந்தால், மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை இந்தியா வழங்கி இருக்காது. உலகின் வேறு சில பகுதிகளில் நடக்கும் சில போர் அண்டை நாடுகளின் வாழ்க்கையை சிக்கலாக்கியுள்ளது. அதனால், உணவு தேவைகள், எரிபொருள் தேவைகள் மற்றும் உரம் தேவைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருந்திருந்தால் அது அண்டை நாடுகளுக்கு எந்த உதவியும் செய்திருக்காது" என்று அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.