Page Loader
சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மருந்துக்கடைகளில் CCTV கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு
கேமராக்களை பொருத்துவதற்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது

சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மருந்துக்கடைகளில் CCTV கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 05, 2024
06:29 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்து மருந்து கடைகளிலும் CCTV கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் உத்தரவிட்டுள்ளார். இந்த சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு 30 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறும்பட்சத்தில், சம்மந்தப்பட்ட மருந்தகங்கள் மீதும், அதன் உரிமையாளர்கள் மீதும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், தென்காசி- சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் பல லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பிடிபட்டபிறகு, சென்னையில் அதிகரித்து வரும் போதை மருந்து கலாச்சாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அதனை தொடர்ந்து, சென்னை காவல்துறை தீவிர சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான் தற்போது சென்னை ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

மருந்தகங்களில் CCTV கட்டாயம்