
சென்னை நந்தனத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்தார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
பிரதமர் மோடி, கல்பாக்கத்தில் அணுமின் நிலையத்தில், விரைவு பெருக்கி உலை திட்டத்தை திறந்து வைத்துவிட்டு, ஹெலிகாப்டர் மூலம் சென்னை வந்தடைந்தார்.
அங்கிருந்து சாலை மார்கமாக சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்திற்கு சென்று, பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
முன்னதாக இன்று மதியம் மஹாராஷ்ட்ராவிலிருந்து சென்னை வந்தடைந்த மோடி, அங்கிருந்து கல்பாக்கம் ஆணு மின் நிலையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார்.
அங்கே பாவனி என்கிற 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையை தொடங்கி வைத்தார் மோடி பின்னர், இத்திட்டத்தின் செயல்பாடு மற்றும் பயன்பாடு குறித்து கல்பாக்கம் விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார்.
இந்தியாவின் முதல் ஈனுலை திட்டம் கல்பாக்கத்தில் தான் செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர், ஹெலிகாப்டர் மூலம் சென்னை வந்தடைந்த மோடி, தொண்டர்களிடேயே உரையாற்ற உள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
கல்பாக்கத்தில் பிரதமர்
#BREAKING || கல்பாக்கத்தில் ஈனுலையை தொடங்கி வைத்தார் மோடி
— Thanthi TV (@ThanthiTV) March 4, 2024
கல்பாக்கத்தில் ஈனுலை திட்டத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார் பிரதமர்
மாலையில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்#ThanthiTV #PMModi #Kalpakkam #TamilNadu… pic.twitter.com/HKosLG4trs
ட்விட்டர் அஞ்சல்
சென்னை வந்தார் மோடி
#BREAKING || பாஜக பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி
— Thanthi TV (@ThanthiTV) March 4, 2024
கல்பாக்கம் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையம் வந்த பிரதமர்
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்#ThanthiTV #PMModi #Chennai #BJP pic.twitter.com/TWhPY7H4kQ