Page Loader
ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை கட்சியிலிருந்து நீக்கிய விசிக
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக்

ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை கட்சியிலிருந்து நீக்கிய விசிக

எழுதியவர் Venkatalakshmi V
Mar 05, 2024
12:28 pm

செய்தி முன்னோட்டம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நீக்குவதாக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஒழுங்குமுறை நடவடிக்கைக்காக அவர் நீக்கப்படுகிறார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கும் முன்னர், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், மேற்கு டெல்லியில் உள்ள குடோனில் போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில், தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.

ஜாபர் சாதிக்

தலைமறைவான ஜாபர் சாதிக்

விசாரணை வளையம் தன்னை நெருங்கியதை அறிந்த தலைமறைவான ஜாபர் சாதிக், தலைமறைவானார். அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவரது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, அவரை கட்சியிலிருந்து நீக்கியது திமுக. ஜாபர் சாதிக்கின் வீடும் சீல் வைக்கப்பட்டு, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். குறிப்பாக அவரது சகோதரர் முகமது சலீம் என்பவரை கண்காணிப்பு வளையத்துக்குள் காவல்துறையினர் கொண்டுவந்துள்ளனர். முகமது சலீம், விசிக கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். போதைப்பொருள் வழக்கில் தற்போது ஜாபர் சாதிக் மற்றும் அவர் சகோதரர் முகமது சலீம் தேடப்படுவதால், அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

முகமது சலீமை கட்சியிலிருந்து நீக்கிய விசிக