LOADING...
மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட இருப்பதாக தகவல் 

மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட இருப்பதாக தகவல் 

எழுதியவர் Sindhuja SM
Mar 06, 2024
01:04 pm

செய்தி முன்னோட்டம்

2002 முதல் ராகுல் காந்தி போட்டியிட்டு வரும் அதே அமேதி தொகுதியில் இருந்து இந்த மக்களவை தேர்தலிலும் அவர் போட்டியிட போவதாக உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு பேசிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பிரதீப் சிங்கால், அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் அவரது பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள்பொதுச்செயலாளரான ராகுல் காந்தி, 2002 முதல் 2019 வரை நடந்த மக்களவை தேர்தல்களில் அமேதி தொகுதியில் தான் போட்டியிட்டார். 2019 பொதுத் தேர்தலின் போது பாஜக தலைவர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்த அவர், தற்போது கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வருகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி?