
நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யகோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
செய்தி முன்னோட்டம்
நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை தனது கட்சிக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு, கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தது நாம் தமிழர் கட்சி.
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது.
அதில்,இந்திய தேர்தல் ஆணையம் உரிய விதிமுறைகளின் படியே சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. மனுததாரர் கூறும்படி எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை.
முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே வழக்கினை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustNow | கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்!#SunNews | #NTKSymbol | #NaamTamilarKatchi | #Seeman pic.twitter.com/jooxTZImkK
— Sun News (@sunnewstamil) March 5, 2024