தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்க கால அவகாசம் கோரியது எஸ்பிஐ
செய்தி முன்னோட்டம்
தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.
மேலும், மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம்(EC) அது குறித்த தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டிருந்தது.
குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதால் அந்த சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்தியா
கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு
அந்த பத்திர திட்டம் குறித்து தீர்ப்பு வழங்கிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூறி இருந்தார்.
இந்த பத்திரங்களை வழங்குவதை நிறுத்தவும், இந்த முறையில் அளிக்கப்பட்ட நன்கொடைகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவும் எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தகவலை மார்ச் 13 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கறுப்புப் பணத்தை எதிர்த்துப் போராடுதல், நன்கொடையாளர்களின் ரகசியத்தன்மையைப் பேணுதல் ஆகியவையால் மட்டும் இந்த திட்டத்தைப் பாதுகாக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.
கறுப்புப் பணத்தை ஒழிக்க தேர்தல் பத்திரங்கள் மட்டும் தான் ஒரே வழி என்பது உண்மையல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.