புதுவை சிறுமி கொலை வழக்கில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல்; இருவர் கைது
செய்தி முன்னோட்டம்
புதுச்சேரியில் கடந்த சனிக்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது 9 வயது சிறுமி மாயமான சில நாட்களில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அருகிலிருந்து ஓடையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேதபரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியால் கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது.
அதன்பின்னர் விசாரணையில் இறங்கிய புதுவை போலீசார், சந்தேகத்தின் பேரில் கருணாஸ்(19), விவேகானந்தன்(59) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. அவர்கள் சிறுமி வீட்டின் அருகே வசிப்பவர்கள்.
சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டபோது, உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் காவல்துறையினருக்கு பயந்து உடலை சாக்குப்பையில் கால்வாயில் வீசியுள்ளனர்.
இதனை அடுத்து, அவர்கள் இருவரின் மீது கொலை வழக்கும், போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சிறுமி கொலை வழக்கு
#NewsUpdate | சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது அம்பலம்!#SunNews | #Puducherry pic.twitter.com/YSnVdUrkzl
— Sun News (@sunnewstamil) March 6, 2024