NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹூக்கா பார்களுக்கும் சிகரெட் விற்பனைக்கும் தடை விதிக்க கர்நாடகா முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹூக்கா பார்களுக்கும் சிகரெட் விற்பனைக்கும் தடை விதிக்க கர்நாடகா முடிவு 

    ஹூக்கா பார்களுக்கும் சிகரெட் விற்பனைக்கும் தடை விதிக்க கர்நாடகா முடிவு 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 21, 2024
    06:37 pm

    செய்தி முன்னோட்டம்

    மாநிலம் முழுவதும் ஹூக்கா பார்களை தடை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு இன்று நிறைவேற்றியது.

    தடையை மீறும் குற்றவாளிகளுக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

    ஏற்கனேவே இயற்றப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தில் (COTPA) திருத்தம் செய்யப்பட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காகவும், புகையிலை தொடர்பான நோய்களைத் தடுப்பதற்காகவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கூடுதலாக, 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களை விற்பனை செய்வதையும் அரசு தடை செய்துள்ளது.

    கர்நாடகா

    கல்வி நிறுவனங்களுக்கு அருகில்  சிகரெட் விற்க தடை 

    மேலும், புகை இல்லாத சூழலை உருவாக்குவதற்காக இந்த திருத்தப்பட்ட மசோதா பொது இடங்களில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது.

    சித்தராமையா தலைமையிலான கர்நாடகா அரசு, கல்வி நிறுவனங்களிலில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. இந்த விதியை மீறினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

    பிப்ரவரி 2024 இல், தெலுங்கானா அரசாங்கம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஹூக்கா பார்லர்களையும் தடை செய்ய இதேபோன்ற மசோதாவை நிறைவேற்றியது.

    கடந்த ஆண்டு, ஹரியானா மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஹூக்காவை வழங்க அம்மாநில அரசு தடை விதித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    கர்நாடகா

    கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு இதய அறுவை சிகிச்சை அறுவை சிகிச்சை
    உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை தமிழ்நாடு
    சென்னையில் மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் பரிதாப மரணம்  செங்கல்பட்டு
    கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தை 'பெங்களூரு தெற்கு' என்று பெயர் மாற்ற திட்டம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார்  பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025