பிசிசிஐ: செய்தி

ரஜினிகாந்துக்கு ஒருநாள் உலகக்கோப்பை கோல்டன் டிக்கெட்டை வழங்கியது பிசிசிஐ

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா செவ்வாய்கிழமை (செப்டம்பர் 19), இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கினார்.

தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் உறவில் ஈடுபட மாட்டோம் என்பது இந்தியாவின் நீண்டகால முடிவாகும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தேர்வுக்குழுவில் மீண்டும் மாற்றத்திற்கு தயாராகும் பிசிசிஐ; பின்னணியில் அஜித் அகர்கர்

பிசிசிஐ ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு உடற்தகுதி இல்லை; ஷ்ரேயாஸ் ஐயரை இலங்கைக்கு எதிரான போட்டியிலிருந்து நீக்கியது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்டரான ஷ்ரேயாஸ் ஐயர், முதுகுவலி காரணமாக இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் இருந்து நீக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்டை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கினார்.

ஒருநாள் உலகக்கோப்பைக்கான இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

அக்டோபர்-நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் விற்பனையின் இரண்டாம் கட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) தொடங்க உள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு 

அடுத்த மாதம் துவங்கவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

உலக கோப்பை மற்றும் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ரோகித் ஷர்மா கருத்து

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் பங்கெடுத்து விளையாடி வருகிறது இந்தியா. இத்தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக குறைவான ரன்களே எடுத்திருந்த போதிலும், மழையின் காரணமாகப் போட்டி ரத்தானது.

பிசிசிஐ டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது வியாகாம் 18 நிறுவனம்

இந்தியாவில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வியாகாம் 18 கைப்பற்றியுள்ளது.

ஆசிய கோப்பை போட்டியைக் காண பாகிஸ்தான் செல்லும் பிசிசிஐ தலைவர்

பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்று, அந்நாட்டுக்கு செல்ல உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஒப்பந்தம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உள்நாட்டில் நடைபெறும் சர்வதேச போட்டிகளுக்கு புதிய டைட்டில் ஸ்பான்சரை ஒப்பந்தம் செய்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் யோ-யோ ஸ்கோரை வெளியிட்டதால் விராட் கோலி மீது பிசிசிஐ அதிருப்தி

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) விராட் கோலி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தனது யோ-யோ பிட்னஸ் டெஸ்ட் ஸ்கோரை வெளிப்படுத்தியிருப்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உயர்மட்ட அதிகாரிகளை எரிச்சலடைய செய்துள்ளது.

ஃபிட்னஸில் எப்போதும் கில்லி! பிசிசிஐயின் கடினமான சோதனையில் வெற்றி பெற்ற விராட் கோலி

தனது உடற்தகுதியை சிறப்பாக வைத்துக் கொள்வதற்காக எப்போதும் அறியப்படும் விராட் கோலி, தற்போது மிகவும் கடினமான யோ-யோ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதியை அறிவித்தது பிசிசிஐ

2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் பார்ட்னராக BookMyShow செயல்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதன்கிழமை (ஆகஸ்ட் 23) அறிவித்துள்ளது.

ஆசியக் கோப்பை வீரர்களின் தேர்வு குறித்த ரசிகரின் கேள்விக்கு லைவ்-ஷோவில் கொந்தளித்த கவாஸ்கர்

ஆறு ஆசிய நாடுகள் பங்குபெறும் 2023 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி இலங்கையில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடருக்கான 17 வீரர்கள் கொண்ட பட்டியலை நேற்று வெளியிட்டது பிசிசிஐ.

ஆசிய கோப்பை தொடக்க விழாவுக்கு ஜெய் ஷா செல்கிறாரா? பிசிசிஐ கூறுவது இதுதான்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷாவை 2023 ஆசிய கோப்பை தொடக்க போட்டிக்கு விருந்தினராக பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்தது.

50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் அட்டவணையில புதிய மாற்றங்களைச் செய்திருக்கும் பிசிசிஐ

2023-ம் ஆண்டிற்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்கான அட்டவணையை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது பிசிசிஐ. அந்த அட்டவணையில் தற்போது சில மாற்றங்களைச் செய்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

2021-22 நிதியாண்டில் ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்திய BCCI

2022-23 நிதியாண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில், 2021-22 நிதியாண்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), எவ்வளவு வருமான வரி செலுத்தியது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

"ஹர்திக் பாண்டியா செய்த மிக பெரிய பிழை"- ராபின் உத்தப்பா அதிருப்தி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது இந்திய அணி.

இந்திய அணியின் ஊடக உரிமை ஏலம்; ரூ.8,200 கோடி வருவாயை எதிர்பார்க்கும் பிசிசிஐ

பிசிசிஐ மார்ச் 2028 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் இந்தியாவின் 88 உள்நாட்டு போட்டிகளுக்கான தனி டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை விற்பதன் மூலம் ரூ.8,200 கோடியை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது.

எம்எஸ் தோனியை அணியில் சேர்க்க மறுத்த சவுரவ் கங்குலி; பின்னணியை பகிர்ந்த முன்னாள் தேர்வாளர்

முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் சபா கரீம், 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு எம்எஸ் தோனியை அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி அணியில் சேர்க்க மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.

ஒருநாள் உலகக்கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் மோதல் அக்டோபர் 14க்கு மாற்றம் எனத் தகவல்

வரவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதல் முதலில் திட்டமிட்டதை விட ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் மாற்றம்; ஜெய் ஷா அறிவிப்பு

ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளில் சில, அட்டவணை குறித்து ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளதால், 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் சில மாற்றங்கள் செய்ய உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் தொடர்; பிசிசிஐ போட்டி அட்டவணை வெளியீடு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டி அட்டவணையை செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) அறிவித்தது.

காயத்திற்கு சிகிச்சை எடுத்து வரும் வீரர்கள் குறித்து பிசிசிஐ முக்கிய அப்டேட் வெளியீடு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) காயத்திற்காக சிகிச்சையில் உள்ள வீரர்கள் குறித்த அப்டேட்டை வெள்ளிக்கிழமை (ஜூலை 21) வெளியிட்டுள்ளது.

பிசிசிஐக்கு 38.5 சதவீதம்; ஐசிசி வருவாய் மாதிரியால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024-27 சுழற்சிக்கான 600 மில்லியன் டாலர் வருவாயில் உறுப்பு நாடுகளுக்கான பங்கு சதவீதத்தை அறிவித்ததில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐசிசி தொடர்களில் இந்தியா தொடர்ந்து தோல்வியடைவதற்கான காரணம் குறித்து விளக்கமளித்த சௌரவ் கங்குலி

2013-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தான் இந்தியா கடைசியாக வென்ற ஐசிசி கோப்பை. அதன் பிறகு, நடைபெற்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும் தோல்வியையே பரிசாக எடுத்து வந்திருக்கிறது இந்திய அணி.

சையது முஸ்தாக் அலி கோப்பைத் தொடரின் விதிமுறைகளில் புதிய மாற்றங்களை அறிவித்திருக்கிறது பிசிசிஐ

பிசிசிஐ-யின் ஏபெக்ஸ் கவுன்சிஸ் சந்திப்பு நேற்று(ஜூலை-7) மும்பையில் நடைபெற்று முடிந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சையது முஸ்தாக் அலி தொடரில் பின்பற்றப்படும் புதிய விதிமுறைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது பிசிசிஐ.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிகள் பங்கேற்க பிசிசிஐ ஒப்புதல்

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் பங்கேற்க ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்திய கிரிக்கெட் அணிகளை அனுப்பத் தயாராக இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

'ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கேப்டனாக அஷ்வினை அனுப்பலாம்': தினேஷ் கார்த்திக்

இந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்கு முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பவிருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ.

01 Jul 2023

ஐசிசி

ICC உலகக் கோப்பை 2023: இந்தியாவுக்கு வர திட்டமிட்டிருக்கும் பாகிஸ்தான் ஆய்வு குழு

இந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட இருக்கும் மைதானங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு பாதுகாப்புக் குழுவை பாகிஸ்தான் இந்தியாவுக்கு அனுப்ப உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பான்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது 'ட்ரீம் 11'

பேன்டஸி கேமிங் தளமான ட்ரீம் 11 அடுத்த மூன்றாண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பான்சராக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அறிவித்திருக்கிறது .

இந்திய அணியின் தேர்வுகுழு தலைவராக அஜித் அகர்கரை நியமிக்க பிசிசிஐ திட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவிக்கு முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கரை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா?', சர்ச்சையில் பிசிசிஐ

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 100 நாட்களே இருக்கும் நிலையில், அதற்கான போட்டி அட்டவணையை வெளியிட்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ.

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் பஞ்சாப், கேரளா புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

பஞ்சாப் விளையாட்டு அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் மற்றும் கேரள எம்பி ஷஷி தரூர் ஆகியோர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் மொஹாலி மற்றும் திருவனந்தபுரம் மைதானங்களை சேர்க்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : பருவமழையால் அரையிறுதி வாய்ப்பை இழந்த சேப்பாக்கம் மைதானம்

இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிட்டது.

1,20,000 அடி உயரத்தில் ஒருநாள் உலகக்கோப்பை டிராபியை அறிமுகம் செய்தது ஐசிசி

இந்தியாவில் அக்டோபர் - நவம்பர் மாதம் நடக்க உள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், இதற்கான கோப்பையை யாரும் எதிர்பாராத வகையில் பிரமாண்ட முறையில் திங்கட்கிழமை (ஜூன் 26) வெளியிட்டுள்ளது.

சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாததற்கு காரணம் அவரது உடற்தகுதிதான், பிசிசிஐ அதிகாரி விளக்கம்

ரஞ்சி கோப்பையில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வந்தபோதிலும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சர்ஃபராஸ் கான் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிசிசிஐ அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்தியா பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (ஜூன் 23) அறிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு, புஜாரா மற்றும் உமேஷ் யாதவும் கல்தா

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (ஜூன் 23) அறிவித்துள்ளது.