சென்னை: செய்தி
விளையாட்டு மனதை சீர்படுத்தும்: மாஸ்டர்ஸ் தடகள விழாவில் விஜய் ஆண்டனி பேச்சு
சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் பங்கேற்ற நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் சூரி, வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கி விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினர்.
அபூர்வ சகோதரர்கள் முதல் புஷ்பக விமானம் வரை: இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் நினைவுகள்
வசனமில்லா பேசும்படம், டைம் டிராவல் கதையான ஆதித்யா 369, அபூர்வ சகோதரர்கள் என இந்தியத் திரையுலகின் கற்பனையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்ற பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் மறைவு குறித்த சிறப்புத் தொகுப்பு.
ஜென்-சி இளைஞர்களுக்கு டி.ஆரின் சூப்பர் அட்வைஸ்: 71-வது பிறந்தநாளில் நெகிழ்ச்சிப் பேட்டி
தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய டி.ராஜேந்தர், அவமானங்களையும் தடைகளையும் புறந்தள்ளி இதயத்தில் நம்பிக்கையை வளர்த்தால் எதையும் சாதிக்கலாம் என Gen Z இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
வாரத்தின் கடைசி நாளில் நிம்மதி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது.
அக்டோபர் 4-ல் கொட்டப்போகும் கனமழை! 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், அக்டோபர் 4 (நாளை மறுநாள்) அன்று 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (அக்டோபர் 3) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இறங்கிய வேகத்தில் மீண்டும் தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை, இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
போக்சோ வழக்கு தொடர்ந்த நிலையில் அடுத்த அதிரடி! தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் தொழிலதிபர் ஆர்.வீரமணி (80), அவரது உதவியாளரான சாந்தி மற்றும் சாந்தியின் கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்துள்ளது.
தங்கம் விலை மீண்டும் சரிவு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, கடந்த வாரம் தொடர்ந்து சரிந்த தங்கத்தின் விலை, இன்று மீண்டும் குறைந்துள்ளது.
பரணூரில் தமிழகத்தின் முதல் பூத் இல்லாத சுங்கச்சாவடி! இனி நிக்காமல் போகலாம்
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள பரணூர் சுங்கச்சாவடியில், தமிழ்நாட்டின் முதல் கட்டண பூத்கள் இல்லாத தானியங்கி மல்டி லேன் ஃப்ரீ ஃபுளோ (MLFF) சுங்கக் கட்டண முறை அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
வணிக எல்பிஜி சிலிண்டர் விலை திடீர் உயர்வு! புதிய விலைப் பட்டியல்
அக்டோபர் மாதம் பிறந்துள்ள நிலையில், வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 30) சேலம், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இசைக்கலைஞர்கள் சங்கத்திற்காக இணையும் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னை வடபழனி கமலா திரையரங்கம் அருகே பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் சினிமா இசைக் கலைஞர்கள் சங்கத்தின் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, ரூ.30 கோடி மதிப்பீட்டில் 10 மாடிகள் கொண்ட புதிய நவீன கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் 'ரவிச்சந்திரன் அஸ்வின் ஸ்டாண்ட்': TNCA முடிவு
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணிக்கும் தமிழ்நாடு கிரிக்கெட்டிற்கும் பல வரலாற்று வெற்றிகளைப் பெற்றுத் தந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரனை கௌரவிக்கும் வகையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் உள்ள புதிய ஸ்டாண்ட் ஒன்றிற்கு அவரது பெயரைச் சூட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) முடிவு செய்துள்ளது.
அமெரிக்க விசா பெறுவதில் இந்தியர்களுக்குச் சிக்கல்: காத்திருப்பு நேரம் உயர்வு மற்றும் புதிய கட்டணங்கள் அறிமுகம்
அமெரிக்க விசா பெற விண்ணப்பிக்கும் இந்திய விண்ணப்பதாரர்கள் இருமடங்கு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கோடம்பாக்கத்தின் அடையாளம்: நட்சத்திர ஹோட்டலாக மாறும் ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபம்
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான, சென்னை கோடம்பாக்கத்தின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றான ராகவேந்திரா திருமண மண்டபம் விரைவில் நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்பட உள்ளதாகக் கோலிவுட் மற்றும் ரியல் எஸ்டேட் வட்டாரங்களில் பரபரப்புத் தகவல் பரவி வருகிறது.
அக்டோபர் தொடர் விடுமுறை: 3,500-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
அக்டோபர் மாதத் தொடக்கத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டி தொடர் விடுமுறை வருவதால், பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழாவில் மாற்றம்? ரஜினி பங்கேற்பதில் சிக்கலா?
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
'நாளை குடை கண்டிப்பாக தேவை!' மதுரை, ஈரோடு, நாமக்கல்லிற்கு கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் தகவல்
வடக்கு உள் கர்நாடகம் முதல் தெற்கு உள் கர்நாடகா வழியாக தமிழ்நாடு வரை சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழ்நாட்டில் மழை நீடிக்கிறது.
வெளியிடுவதும் ரத்து செய்வதும் தொடர்கதையா? தமிழக அரசின் வரிசையான அரசாணை ரத்துகள்; விரிவான பின்னணி
தமிழக அரசு சமீபகாலமாக பல முக்கிய திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பான அரசாணைகளை அவசர அவசரமாக வெளியிட்டு, பின்னர் மக்களின் எதிர்ப்பிற்குப் பயந்து அவற்றை உடனடியாகத் திரும்பப் பெற்று வருகிறது.
நகை வாங்க இதுதான் சரியான நேரம்! தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரியும் தங்கம் விலை
நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, கடந்த வாரம் தொடர்ந்து சரிந்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று மீண்டும் குறைந்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-வது பொதுக்குழு இறுதியில் வெளியான மாஸ் அறிவிப்பு: நடிகர் சங்கம் கட்டிடம் திறப்பு எப்போது?
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், செப்டம்பர் 27-ஆம் தேதியான இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது.
தமிழக வானிலை அப்டேட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பொழியும்?
தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக மதுரை, திருச்சி, ஈரோடு, நாகை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி சதமடித்துள்ள நிலையில், இன்று முதல் அக்டோபர் 1 வரை பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாரத்தின் இறுதியில் மீண்டும் தங்கம் விலை சரிவு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
வண்டலூர் அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைப் புகார்: உதயநிதி கண்டனம்; ஆதாரமில்லை எனத் தாம்பரம் காவல்துறை விளக்கம்
சென்னை வண்டலூர் அருகே உள்ள கண்டிகை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர், பள்ளி கழிவறைக்கு சென்றபோது மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான செய்தி அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு நாள் சரிவுக்குப் பின் மீண்டும் தங்கம் விலை உயர்வு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று மிகவும் குறைந்த அளவில் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: கரையை கடந்த புயல் சின்னம்
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கலிங்கப்பட்டினம் அருகே கரையை கடந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை சரிவு; இன்றைய நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக இன்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு மற்றும் உண்ணிக் காய்ச்சல்: மாஸ்க் அணிய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக உண்ணிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
'நான் உண்மையைச் சொன்னால் ராதா தான் சிறைக்குச் செல்வார்': நடிகை அம்பிகா பேட்டி
தமிழ் திரையுலகின் 80-களின் முன்னணி நடிகைகளான சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா இடையே சென்னையில் உள்ள 'ஏ.ஆர்.எஸ் கார்டன்' சொத்து விவகாரம் தொடர்பாக கடுமையான மோதல் வெடித்துள்ளது.
பிக் பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது: குறும்பட மோசடி மற்றும் மிரட்டல் புகாரில் சென்னை கிண்டி காவல்துறை நடவடிக்கை
விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி மற்றும் 'கண்ணான கண்ணே' போன்ற சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமான நடிகை வர்ஷினி வெங்கட், பண மோசடி மற்றும் மிரட்டல் வழக்கில் சென்னை கிண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் புயல் சின்னம் தீவிரமடைகிறது; சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கு மூடப்பட்டதா? அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்
ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
வாரத்தின் இரண்டாவது நாள் சவரன் விலை என்ன தெரியுமா?
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
சென்னையில் காலடி எடுத்து வைக்கும் டெஸ்லா; இந்த வாரமே புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் திறப்பு
உலகின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான எலான் மஸ்கின் டெஸ்லா, இந்தியாவில் தனது விற்பனை சந்தையை விரிவுபடுத்தும் நடவடிக்கையாக சென்னையில் தனது புதிய 'எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை' (Showroom) இந்த வாரமே திறக்கவுள்ளது.
6 முதல் 8-ம் வகுப்பு வரை காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்' விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னைக்கு வெளியே மாபெரும் நிர்வாக நகரம்? பட்டினப்பாக்கம் சர்ச்சையால் திருவிடந்தை இடத்தை தேர்வு செய்யுமா அரசு?
சென்னை மெரினா கடற்கரையை அடுத்துள்ள பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கு எழுந்துள்ள பலத்த எதிர்ப்புகளால் மாற்று இடங்களை அரசு பரிசீலிக்கலாமா என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
மகளிருக்கான 'வெற்றிப் பயணம்' இலவச பேருந்து திட்டம்: அக்டோபர் 2-ல் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்து பயண திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள 'வெற்றிப் பயணம்' திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்கு: விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
பிரபல ஜெம் குழுமத்தின் தலைவரும், கிரானைட் தொழிலதிபருமான ஆர்.வீரமணி மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட போக்சோ (POCSO) வழக்குத் தொடர்பாக காவல் துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிற்கு வெளியே முதன்முறை: சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்கிறது ஸ்டார்பக்ஸ்; புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
தமிழ்நாட்டின் தொழில்நுட்ப மைய உலகளாவிய வளர்ச்சியை மேலும் உயர்த்தும் வகையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், அமெரிக்காவிற்கு வெளியே தனது முதலாவது உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் அமைக்க உள்ளது.