Loading...
மகளிருக்கான 'வெற்றிப் பயணம்' இலவச பேருந்து திட்டம்: அக்டோபர் 2-ல் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்
அக்டோபர் 2-ஆம் தேதி முதல் இத்திட்டம் மாநிலம் முழுவதும் முறைப்படி தொடங்கி வைக்கப்படவுள்ளது

மகளிருக்கான 'வெற்றிப் பயணம்' இலவச பேருந்து திட்டம்: அக்டோபர் 2-ல் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 21, 2026
02:56 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்து பயண திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள 'வெற்றிப் பயணம்' திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 24 அன்று சட்டமன்ற பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் இத்திட்டம் மாநிலம் முழுவதும் முறைப்படி தொடங்கி வைக்கப்படவுள்ளது. பெண் கல்வி, பணி வாய்ப்பு மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் நோக்கில் இச்சேவை விரிவுபடுத்தப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

புள்ளிவிவரங்கள்

விரிவடையும் பேருந்து சேவைகள் மற்றும் புள்ளிவிவரங்கள்

தற்போது நகர்ப்புற சாதாரண கட்டண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ வரையிலான மலைப்பகுதிகளில் மட்டுமே இலவசப் பயணம் நடைமுறையில் உள்ளது.

புதிய 'வெற்றிப் பயணம்' திட்டத்தின் மூலம், மாநகர மற்றும் நகர்ப்புற எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ் (Deluxe), புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ-க்கு மேற்பட்ட மலைப்பாதை பேருந்துகளுக்கும் இச்சேவை விரிவாக்கப்படுகிறது.

அரசுப் போக்குவரத்து கழகங்களின் மொத்தமுள்ள 18,413 பேருந்துகளில் 12,692 பேருந்துகள் (69 விழுக்காடு) இத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும்.

மொத்தமுள்ள 1.94 லட்சம் நடைகளில் 1.65 லட்சம் நடைகள் (85 விழுக்காடு) மகளிர் இலவச பயணத்திற்காக பயன்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஆய்வு

இடிஎம் சோதனை ஓட்டம் மற்றும் ஆய்வு

இத்திட்டத்திற்காக பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்கள் (ETM) இணைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதற்கான சோதனைப் பணிகள் செப்டம்பர் 25-க்குள்ளும், இறுதிச் சோதனை ஓட்டம் செப்டம்பர் 27 அன்றும் நடத்தப்படவுள்ளன.

இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நிதித் துறை மற்றும் போக்குவரத்துத் துறைச் செயலாளர்கள் உட்படப் பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT