Loading...
அக்டோபர் 4-ல் கொட்டப்போகும் கனமழை! 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்
4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்

அக்டோபர் 4-ல் கொட்டப்போகும் கனமழை! 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 02, 2026
06:29 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், அக்டோபர் 4 (நாளை மறுநாள்) அன்று 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மண்டலப் பகுதிகளில் வீசும் சாதகமான காற்று மாறுபாடு காரணமாக இந்த மழைப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

எச்சரிக்கை

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, அக்டோபர் 4 அன்று நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கக்கூடும்.

ஏனைய தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மண்டலங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

ADVERTISEMENT