Loading...
வண்டலூர் அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைப் புகார்: உதயநிதி கண்டனம்; ஆதாரமில்லை எனத் தாம்பரம் காவல்துறை விளக்கம்
இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

வண்டலூர் அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைப் புகார்: உதயநிதி கண்டனம்; ஆதாரமில்லை எனத் தாம்பரம் காவல்துறை விளக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2026
02:45 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை வண்டலூர் அருகே உள்ள கண்டிகை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர், பள்ளி கழிவறைக்கு சென்றபோது மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான செய்தி அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, முதலுதவிக்கு பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள கண்டிகை சந்திப்பில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

கண்டனம்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "பெண்கள் பாதுகாப்பில் 'No Compromise' என்று சொல்லும் அரசில், அரசுப் பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடானது".

"மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தைக் காரணம் காட்டி, இந்தச் சம்பவத்தைக் காவல்துறையும் அதிகாரிகளும் 'பாம்புக்கடி' என்று கூறி மூடி மறைக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்கவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

விளக்கம்

"ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை": தாம்பரம் காவல்துறை விளக்கம்

இது குறித்து தாம்பரம் மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "புகார் பெறப்பட்ட உடனேயே FIR பதிவு செய்யப்பட்டு, மூத்த பெண் அதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி வளாக சிசிடிவி (CCTV) காட்சிகள், மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களை ஆய்வு செய்ததில், புகாரில் கூறப்பட்டது போலப் பள்ளி வளாகத்தில் அத்தகைய சம்பவம் நடந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை". *

"குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு, ஊடகங்களும் பொதுமக்களும் உறுதிப்படுத்தப்படாத வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT