Loading...
சென்னையில் காலடி எடுத்து வைக்கும் டெஸ்லா; இந்த வாரமே புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் திறப்பு
சென்னையில் காலடி எடுத்து வைக்கும் டெஸ்லா

சென்னையில் காலடி எடுத்து வைக்கும் டெஸ்லா; இந்த வாரமே புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் திறப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 22, 2026
10:51 am

செய்தி முன்னோட்டம்

உலகின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான எலான் மஸ்கின் டெஸ்லா, இந்தியாவில் தனது விற்பனை சந்தையை விரிவுபடுத்தும் நடவடிக்கையாக சென்னையில் தனது புதிய 'எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை' (Showroom) இந்த வாரமே திறக்கவுள்ளது. ஏற்கனவே டெல்லி, குருகிராம், மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் டெஸ்லா ஷோரூம்களை அமைத்துள்ள நிலையில், சென்னையில் திறக்கப்படும் புதிய ஷோரூம் மூலம் இந்தியாவில் டெஸ்லாவின் மொத்த ஷோரூம்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கும். மேலும் தென்னிந்தியாவில் பெங்களூரு, ஹைதராபாத்திற்கு அடுத்தபடியாக டெஸ்லா காலடி வைக்கும் 3-வது நகரம் சென்னை என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனை

இந்தியாவில் டெஸ்லா கார்களின் விற்பனை மற்றும் மாடல்கள்

இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 150 டெஸ்லா கார்கள் விற்பனையாகியுள்ளன.

நடப்பு 2026 காலண்டர் ஆண்டில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தில் மட்டும் 38 கார்கள் விற்பனையாகியுள்ளன.

தற்போது இந்தியச் சந்தையில் டெஸ்லாவின் இரு முக்கிய மாடல்கள் விற்பனையில் உள்ளன

டெஸ்லா மாடல் Y: 5 பேர் அமரக்கூடிய இந்த காரின் விலை ₹50.89 லட்சத்தில் தொடங்குகிறது.

டெஸ்லா மாடல் Y L: 6 பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இதன் விலை ₹61.99 லட்சத்தில் தொடங்குகிறது.

மின்சார வாகனச் சந்தை

தமிழ்நாட்டின் மின்சார வாகனச் சந்தை

தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான தேவையும் வரவேற்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

2026-ஆம் ஆண்டில் இதுவரை தமிழகத்தில் 19,700-க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதில் சுமார் 800 கார்கள் சொகுசு பிராண்டுகளுடையது.

இதனை மனதில் கொண்டே, சென்னையில் நேரடியாக தனது எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை திறப்பதன் மூலம் தமிழகத்தில் தனது விற்பனையை மேலும் அதிகரிக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT