Loading...
வணிக எல்பிஜி சிலிண்டர் விலை திடீர் உயர்வு! புதிய விலைப் பட்டியல்
வணிக எல்பிஜி சிலிண்டர் விலை திடீர் உயர்வு

வணிக எல்பிஜி சிலிண்டர் விலை திடீர் உயர்வு! புதிய விலைப் பட்டியல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 01, 2026
07:12 am

செய்தி முன்னோட்டம்

அக்டோபர் மாதம் பிறந்துள்ள நிலையில், வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு அக்டோபர் 1 முதல் நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ஹோட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் தவா உணவகங்கள் பயன்படுத்தும் இந்த சிலிண்டர்களின் விலை ஒரே அடியாக ₹60-க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளதால், வணிகர்களின் இயக்கச் செலவு கணிசமாக அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக் காலம் விரைவில் வரவுள்ள நிலையில் இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை

சென்னையில் ₹2,983 ஆக உயர்வு - பெருநகரங்களின் புதிய விலை பட்டியல்

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் செப்டம்பர் மாதம் ₹2,916.50 ஆக இருந்த 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை, தற்போது ₹66.50 உயர்ந்து ₹2,983 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், நாட்டின் தலைநகரான டெல்லியில் ₹62.50 உயர்ந்து ₹2,810 ஆகவும், மும்பையில் ₹63 உயர்ந்து ₹2,764 ஆகவும் விற்கப்படுகிறது.

முக்கிய நகரங்களிலேயே பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் அதிகபட்சமாக ₹71.50 உயர்ந்து ஒரு சிலிண்டர் ₹3,100.50 என்ற உச்சத்தை தொட்டுள்ளது.

வீட்டு உபயோகம்

வீட்டு உபயோக சிலிண்டர் நுகர்வோருக்கு நிம்மதி

வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்ட போதிலும், வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

டெல்லியில் ₹942, மும்பையில் ₹941.50, சென்னையில் ₹957.50 மற்றும் பாட்னாவில் ₹1,031.50 என்ற பழைய விலையிலேயே வீட்டு உபயோக சிலிண்டர்கள் தொடர்ந்து கிடைக்கும்.

இதனால் பண்டிகை காலத்தில் சாமானிய பொதுமக்கள் மற்றும் குடும்பத் தலைவிகள் மீதான நேரடிப் பொருளாதார சுமை தவிர்க்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விலை நிர்ணயம்

எரிவாயு விலை நிர்ணயிக்கப்படும் முறை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜியின் சராசரி சந்தை விலை மற்றும் அந்நியச் செலாவணி மாற்று விகிதம் (டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு) ஆகியவற்றைக் கணக்கிட்டே எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கின்றன.

இருப்பினும், சர்வதேச அளவில் விலை உயர்ந்தாலும், சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வீட்டு உபயோக சிலிண்டரின் விலையைக் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு மானியங்கள் மற்றும் சந்தைக் கட்டுப்பாட்டு முடிவுகளை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT