இறங்கிய வேகத்தில் மீண்டும் தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை, இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹95 அதிகரித்து ₹13,775 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹760 அதிகரித்து ₹1,10,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹104 அதிகரித்து ₹15,028 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹832 அதிகரித்து ₹1,20,224 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமில்லை
18 கேரட் தங்கத்தின் விளையும் இன்று அதிகரித்துள்ளது.
அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹77 அதிகரித்து ₹11,317 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹616 அதிகரித்து ₹90,536 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹240.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,40,000 ஆக விற்கப்படுகிறது.