Loading...
போக்சோ வழக்கு தொடர்ந்த நிலையில் அடுத்த அதிரடி! தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

போக்சோ வழக்கு தொடர்ந்த நிலையில் அடுத்த அதிரடி! தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

எழுதியவர் Sekar Chinnappan
Oct 01, 2026
06:06 pm

செய்தி முன்னோட்டம்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் தொழிலதிபர் ஆர்.வீரமணி (80), அவரது உதவியாளரான சாந்தி மற்றும் சாந்தியின் கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையர் இவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

போக்சோ வழக்குகள்

ஏற்கனவே நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகள்

ஜெம் வீரமணி மீது ஏற்கனவே 2 போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், 2004 ஆம் ஆண்டு சிறுமி தற்கொலைக்குத் தூண்டிய வழக்கும் இவர் மீது அண்மையில் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரிக்கப் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஜாமீனில் வெளிவருவதைத் தடுக்கும் வகையில் இவர் மீது தற்போது குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

11 நபர்கள்

கூடுதலாக 11 நபர்கள் மீது குண்டாஸ் நடவடிக்கை

ஜெம் வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் மட்டுமன்றி, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்த நபர்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மேலும் 11 பேரையும் ஒரே நேரத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ஜெம் வீரமணி வழக்கில் சாட்சியங்களை மறைக்க முயன்றதாகக் கூறப்பட்ட புகார்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்துச் சிறப்பு விசாரணைக் குழுவினர் விரிவான குற்றப்பத்திரிகையைத் தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.

ADVERTISEMENT