Loading...
நகை வாங்க இதுதான் சரியான நேரம்! தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரியும் தங்கம் விலை
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க இதுதான் சரியான நேரம்! தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரியும் தங்கம் விலை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2026
10:04 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, கடந்த வாரம் தொடர்ந்து சரிந்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, திங்கட்கிழமை (செப்டம்பர் 28), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹235 குறைந்து ₹13,765 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,880 குறைந்து ₹1,10,120 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹256 குறைந்து ₹15,017 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,048 குறைந்து ₹1,20,136 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் வீழ்ச்சி

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.

அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹235 குறைந்து ₹11,535 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,880 குறைந்து ₹92,280 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹245 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,45,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT