Loading...
ஜென்-சி இளைஞர்களுக்கு டி.ஆரின் சூப்பர் அட்வைஸ்: 71-வது பிறந்தநாளில் நெகிழ்ச்சிப் பேட்டி
நடிகர் டி.ராஜேந்தர் தனது 71வது பிறந்தநாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஜென்-சி இளைஞர்களுக்கு டி.ஆரின் சூப்பர் அட்வைஸ்: 71-வது பிறந்தநாளில் நெகிழ்ச்சிப் பேட்டி

எழுதியவர் Vasuki
Oct 03, 2026
09:43 pm

செய்தி முன்னோட்டம்

தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய டி.ராஜேந்தர், அவமானங்களையும் தடைகளையும் புறந்தள்ளி இதயத்தில் நம்பிக்கையை வளர்த்தால் எதையும் சாதிக்கலாம் என Gen Z இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகத் திறமைக் கொண்ட டி.ராஜேந்தர், தனது 71-வது பிறந்தநாளை சென்னை தி.நகரில் கொண்டாடிய நிலையில், 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவிகளை வழங்கினார். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பெயர், புகழ், செல்வத்தை மட்டும் சேர்க்காமல், பிறருக்குக் கொடுத்து உதவும் தான சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தானத்தின் பெருமையை விளக்கும் பிரத்யேகப் பாடல் ஒன்றை தனது இணையதளத்தில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு அறிவுரை

டி.ஆரின் வாழ்க்கைப் பாடம்

திரையுலகப் பயணத்தில் தான் சந்தித்த சவால்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த டி.ராஜேந்தர், இன்றைய இளைய தலைமுறையினருக்கும் Gen Z ரசிகர்களுக்கும் முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கினார்.

நான் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டேன் என்பதற்காக மட்டுமே இதைச் சொல்லவில்லை எனது பயணத்தில் நான் சந்தித்த அவமானங்கள், இடைஞ்சல்கள் மற்றும் கஷ்டங்கள் மிக அதிகம்.

ஆனால் அவை அனைத்தையும் ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டுவிட்டு நகர்ந்துவிட்டேன்.

இளைஞர்கள் தங்கள் இதயத்தில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்தால் உலகில் நிச்சயம் எதையும் சாதித்து வெற்றி பெற முடியும் என்று அவர் உற்சாகமாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT